வாஷிங்டன் : அமெரிக் அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல் போக்கு, தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. அதாவது, ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த மஸ்க், ட்ரம்பை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலடியாக ட்ரம்பும் மஸ்க்கை கடுமையாக விமர்சித்ததால், இருவருக்கும் இடையே மோதல் தீவிரமடைந்தது. இதனை தொடர்ந்து, மஸ்க்குடனான உறவு முற்றிலும் முறிந்துவிட்டதாகவும், இனி அவருடன் பேச விரும்பவில்லை என்றும் ட்ரம்ப் திட்டவட்டமாக அறிவித்தார். […]
லாஸ் வேகாஸ் : அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் டிரம்ப் அரசின் நடவடிக்கைக்கு எதிராக, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மக்கள் போராட்டம் வலுத்து வருகிறது. அதிகரித்து வரும் அமைதியின்மையைத் தொடர்ந்து, லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் இரவு நேர ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். இந்த நிலையில், டிக்டாக் பிரபலம் காபி லேம், விசா காலத்தையும் தாண்டி அமெரிக்காவில் தங்கி இருந்ததாக லாஸ் வேகாஸில் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (ICE) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பிறகு […]
நெல்லை: கடந்த ஏப்ரல் 11ம் தேதி அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) கீழ் போட்டியிடும் என அறிவித்தார். இந்தக் கூட்டணி தமிழ்நாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (ஈபிஎஸ்) தலைமையில் செயல்படும், மேலும் தேசிய அளவில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இருக்கும் என்று அவர் தெரிவித்தார். அதே நேரம், […]
டெல்லி : டெல்லியில் உள்ள சட்டவிரோத குடிசைப்பகுதிகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மதராசி முகாம் உட்பட பல இடங்களில் குடிசைப்பகுதிகள் இடிக்கப்பட்ட பிறகு, கோவிந்த்புரி பகுதியில் உள்ள கல்காஜியின் பூமிஹீன் முகாமில், அமைந்துள்ள குடிசைப்பகுதிகளும் அகற்றப்பட்டு வருகின்றன. பலத்த போலீஸ் படை நிறுத்தப்பட்ட பிறகு, புல்டோசர்கள் மூலம் குடிசைப்பகுதிகள் இடிக்கப்படுகின்றன. நேற்றைய தினம், ஜூன் 10 ஆம் தேதிக்குள் இந்த இடத்தை காலி செய்யுமாறு டிடிஏ முன்னதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. ஆனால், குடியிருப்புக்களை […]
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வடகரை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இந்த பட்டாசு வெடி விபத்தில் காயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வடகரையில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை வழக்கம் போல தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென அங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு கட்டடம் இடிந்து தரைமட்டமானது. வேதிப்பொருள் கலவையில் உராய்வு ஏற்பட்டதால் […]
லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் டிரம்ப் அரசின் நடவடிக்கைக்கு எதிராக, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மக்கள் போராட்டம் வலுத்து வருகிறது. அங்கு போராட்டத்தில் ஈடுபடுவோர் இரவு நேரங்களில் கடைகளை கொள்ளையடிக்கும் சம்பவத்தில் ஈடுபடுவதாலும், அதிகரித்து வரும் அமைதியின்மையைத் தொடர்ந்து, லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் இரவு நேர ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்கு தொடங்கி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசவேலைகளைத் […]
ஹரியானா : நாடு முழுவதும் நிலவும் கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை நிலைமைகளுக்கு மத்தியில், மத்திய அரசு ஏர் கண்டிஷனர்கள் (ஏசி) பயன்பாடு தொடர்பாக ஒரு பெரிய திட்டத்தை அறிவித்துள்ளது. அதாவது, ஏ.சி-யின் அளவு 20°C முதல் 28°C வரை மட்டுமே இருக்குமாறு புதிய விதிமுறை கொண்டுவரப்பட உள்ளதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் மனோகர் லால் கட்டார் தகவல் தெரிவித்துள்ளார். இதன்படி 20°C-க்கு கீழ் குறைக்கவோ, 28°C-க்கு மேல் அதிகரிக்கவோ முடியாது. […]
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது காரணமாக வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று (ஜூன் 11) திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், […]
ஃபுளோரிடா : இந்தியாவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்து செல்லும் ஆக்சியம்-4 திட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதாவது, இறுதிக்கட்ட சோதனையின்போது ஃபால்கன் 9 ராக்கெட்டின் உந்துவிசை அமைப்பில் கசிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. ஸ்பேஸ்எக்ஸ் குழுக்கள், LOx கசிவை சரிசெய்யும் வகையில், Ax-4 பணிக்காக நாளை ஃபால்கன் 9 ராக்கெட் ஏவப்படுவது ஒத்திவைக்கப்படுவதாகவும், பழுதுபார்ப்பு பணிகள் மற்றும் விண்வெளி தூரம் கிடைப்பதைப் பொறுத்து புதிய ஏவுதள தேதி பகிரப்படும் என்றும் […]
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் சென்னையில் தொடர்ச்சியாக 2-வது நாளாக மழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையமும் வரும் நாட்களில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து வானிலை தொடர்பான செய்திகளை கொடுத்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் […]
மெரிட் தீவு : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, ஆக்ஸியம் மிஷன் 4 (Ax-4) இன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நாளை செல்லவிருக்கிறார். முன்னதாக இவர் மே மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், அதன்பிறகு ஜூன் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக ஏவுதல் ஜூன் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்றும் நடைபெறவிருந்த மோசமான வானிலை காரணமாக அதன் ஏவுதல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட […]
சென்னை : தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக 19.260 பணியிடங்கள் 18 மாதங்களில் நிரப்பப்படும்” என்று சட்டப்பேரவையில் முதல்வர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரு அறிகுறி கூட திமுக ஆட்சியில் தென்படவில்லை என கூறி திமுகவை விமர்சனம் செய்து பதிவு ஒன்றை வெளிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது ” தகுதித் தேர்வில் வென்ற இடைநிலை ஆசிரியர்களுக்குப் பணியாணை வழங்காமை, போதிய வகுப்பறை வசதியின்மை, மாணவர்களே கழிவறையைக் கழுவும் […]
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், கட்சிகள் அனைத்தும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் சென்று கொண்டிருக்கும் வேலையில் பாமக உட்கட்சி விவகாரம் என்பது எப்போது முடிவுக்கு வரும் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போகிறது என்று தொண்டர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். அன்புமணி – ராமதாஸ் இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சனை இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இருவரையும் சமரசம் செய்வதற்கான முயற்சிகள் ஒரு பக்கம் ஓடிக்கொண்டு இருக்கிறது. அதே சமயம், மற்றொரு பக்கம் பாமகவில் […]
சென்னை : தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி கிராமத்தில், 2014-15 முதல் மத்திய தொல்லியல் துறையின் கீழ் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த அகழாய்வுகள், வைகை நதிக்கரையில் அமைந்த கீழடி ஒரு தொன்மையான நகர்ப்புற நாகரிகமாக இருந்ததை உறுதிப்படுத்தின. இந்த ஆய்வுகளை இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனமும் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையும் மேற்கொண்டன. 2023 ஜனவரியில், அமர்நாத் ராமகிருஷ்ணன் 982 பக்க ஆய்வறிக்கையை மத்திய தொல்லியல் துறைக்கு சமர்ப்பித்தார், ஆனால் அது இன்னும் வெளியிடப்படவில்லை. […]
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 11-06-2025: வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், […]
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது எப்போது முடிவுக்கு வரும் என அவர்களுடைய தொண்டர்கள் ஒரு பக்கம் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், மற்றொரு பக்கம் கட்சியின் நிறுவனர் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களை நீக்கி வேறு சிலரை அந்த பதவிகளுக்கு நியமித்து வருகிறார். எனவே, இதன் காரணமாக பிரச்சினை இப்போது முடியாது இன்னும் தொடர்ந்து கொண்டே செல்லுமோ என தொண்டர்கள் யோசிக்கிறார்கள். இந்த கேள்விகள் தான் அரசியல் வட்டாரங்களில் எழுந்திருக்கிறது. ஏற்கனவே பலரை ராமதாஸ் நீக்கியிருந்த நிலையில் இன்று […]
கர்நாடகா : முதலமைச்சர் சித்தராமையா மீதான மைசூர் நகர வளர்ச்சி ஆணையம் (மூடா) தொடர்பான ஊழல் புகார் தொடர்பாக அமலாக்கத்துறை (ED) தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில், சித்தராமையாவின் மனைவி பார்வதியிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட 3.16 ஏக்கர் நிலத்திற்கு மாற்று நிலம் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுன் சாமி மற்றும் நிலம் விற்ற தேவராஜு ஆகியோர் மீது லோக்ஆயுக்தா மற்றும் அமலாக்கத்துறை […]
சென்னை : கீழடி, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். இங்கு 2014-15 முதல் மத்திய தொல்லியல் துறையின் கீழ், அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில், முதல் இரண்டு கட்ட அகழாய்வுகள் நடைபெற்றன. இந்த ஆய்வுகள், வைகை நதிக்கரையில் அமைந்த கீழடி ஒரு தொன்மையான நகர்ப்புற நாகரிகமாக இருந்ததை உறுதிப்படுத்தின. இந்த ஆய்வுகள் இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம் (ASI) மற்றும் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டன. தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கடந்த […]
கொரியா : BTS உறுப்பினர்களான (பாடகர்கள்) RM (கிம் நம்-ஜூன்) மற்றும் V (கிம் டே-ஹியுங்) ஆகியோர் தென் கொரியாவின் கட்டாய இராணுவ சேவையை முடித்துவிட்டு இன்று (ஜூன் 10) வீடு திரும்பியுள்ளனர். ஆர்.எம் மற்றும் வி ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், இருவரும் முதல் முறையாக பத்திரிகையாளர்கள் முன் தோன்றினர். தென் கொரியாவில், 18 முதல் 35 வயதுடைய ஆண்கள் அனைவரும் சுமார் 18-21 மாதங்கள் இராணுவ சேவை செய்ய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. […]
சென்னை : நாடு முழுவதும் கடந்த மே 4 ஆம் தேதி, நீட் தேர்வு நடத்தப்பட்டது. அன்றைய தினம், சென்னை அருகே அவடியில் உள்ள கேந்திரிய வித்யாலயா CRPF மையத்தில் 464 மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு நடந்தபோது, மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெற்ற இந்தத் தேர்வில், மாலை 3 மணி முதல் 4:15 மணி வரை மின்சாரம் தடைபட்டது. கனமழை மற்றும் புயல் காரணமாக இது நிகழ்ந்தது, இதனால் மாணவர்கள் […]