எவ்ளோ காலம் முடியுமோ அவ்ளோ காலம் ரேஸ் ஓட்டுவேன் -அஜித்குமார் பேட்டி!

ரேசிங் ஆர்வம் தற்காலிகமானது அல்ல என்று கூறியுள்ள அஜித், தன்னால் எவ்வளவு காலம் டிராக்கில் காரைச் செலுத்த முடியுமோ அவ்வளவு காலம் இந்த ஸ்போர்ட்ஸில் நிலைத்திருப்பதே தன் வாழ்நாளின் லட்சியம் எனத் தெரிவித்துள்ளார்.

Hero Image

துபாய் : தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித்குமார், வெள்ளித்திரையைத் தாண்டி சர்வதேச கார் பந்தயங்களில் (International Motorsports) இந்தியக் கொடியைப் பறக்கவிட்டு வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடந்த சர்வதேச கார் பந்தயத் தொடரில் பங்கேற்ற அஜித்குமாரின் ரேசிங் அணி, நேற்றைய விறுவிறுப்பான ரேஸில் 5-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

இந்த மாபெரும் வெற்றிக்குப் பிறகு சர்வதேச ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ள அஜித்குமார், தனது ரேசிங் வாழ்க்கை மற்றும் அதற்காக அவர் செய்துள்ள சில தனிப்பட்ட தியாகங்கள் குறித்து முதல்முறையாக மனம் திறந்துள்ளார்.

தனது ரேசிங் ஆர்வம் தற்காலிகமானது அல்ல என்பதை அஜித்குமார் தனது பேட்டியில் ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "நான் தொடர்ந்து சர்வதேச கார் பந்தயங்களில் தீவிரமாகப் பங்கேற்பேன். என்னால் எவ்வளவு காலம் டிராக்-கில் (Track) காரைச் செலுத்த முடியுமோ, அவ்வளவு காலம் இந்த ஸ்போர்ட்ஸில் நான் நிலைத்திருப்பேன். ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச பந்தயங்களில் பங்கேற்க வேண்டும் என்பதே என் வாழ்நாளின் லட்சியம்." என தெரிவித்தார்.

அஜித் ரசிகர்கள் பலருக்கும் அவர் ஏன் அடிக்கடி துபாயில் இருக்கிறார் என்ற கேள்வி இருந்தது. அதற்கான உண்மையான காரணத்தை அவரே இந்த பேட்டியில் உடைத்துள்ளார். "கார் பந்தயங்களில் உலகத்தரம் வாய்ந்த உத்திகளையும், அதிநவீன பயிற்சிகளையும் (Professional Training) பெறுவதற்காக, கடந்த 3 ஆண்டுகளாக நான் துபாயில் தான் வசித்து வருகிறேன்.

பந்தயங்களில் நான் தொடர்ந்து பங்கேற்க வேண்டிய சர்வதேச பொறுப்புகள் இருப்பதால், தற்போது இதற்கான பிரத்யேக பயிற்சிகளுக்காகவே எனது பெரும்பாலான நேரத்தைச் செலவழித்து வருகிறேன்." எனவும் அதற்கும் தன்னுடைய விளக்கத்தை அளித்துள்ளார்.

ஒரு சர்வதேச ரேஸராக மாறுவதற்குப் பின்னால் இருக்கும் குடும்ப தியாகத்தையும் அஜித் பகிர்ந்துள்ளார். "எனது குடும்பத்தினர் இந்தியாவில் இருக்கிறார்கள். ஆனால் நான் பயிற்சிக்காக துபாயில் இருக்க வேண்டியுள்ளது. இந்த சவால்களைத் தாண்டி, நாங்கள் இப்போது எங்களுடைய 2027-ஆம் ஆண்டிற்கான பிரம்மாண்ட பந்தயத் திட்டத்தை (2027 Racing Season Blueprint) மிகத் தீவிரமாகத் தயார் செய்து கொண்டிருக்கிறோம்" என்று உற்சாகத்துடன் கூறியுள்ளார்.

எவ்ளோ காலம் முடியுமோ அவ்ளோ காலம் ரேஸ் ஓட்டுவேன் -அஜித்குமார் பேட்டி!