திரைக்கலைஞர்களுக்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறுமா? ரஜினிகாந்த் கொடுத்த பதில்!

ஷூட்டிங் நடந்துட்டு இருக்கு எனவும் 2026ல் படம் வெளியாகும் எனவும் ஜெயிலர்-2 பற்றி நடிகர் ரஜினிகாந்த் அப்டேட் கொடுத்துள்ளார்.

Featured image

சென்னை :நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பு பிசியாக இருக்கும் நிலையில், கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து சில கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

இது குறித்து பேசிய ரஜினிகாந்த் ” ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயன்ஸ்க்கு சேர்ந்து ஒரு திரைப்படம் செய்யப்போகிறேன். அந்த படத்திற்கு இயக்குனர் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. நானும் கமல்ஹாசனும் இணைந்தது நடிக்கவேண்டும் என்பது என்னுடைய ஆசை. எனவே, அதற்கு ஏற்றது போல கதாபாத்திரம் கிடைத்தது என்றால் நிச்சயமாக நடிப்பேன்.

ஆனால், அந்த படத்திற்கான ஐடியா அப்படியே இருக்கிறது. இன்னும் கதாபாத்திரம் இயக்குனர் யார் என்பது தேர்வு செய்யப்படவில்லை” எனவும் ரஜினிகாந்த் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து ஜெயிலர் 2 படத்திற்கான அப்டேட் குறித்து ஒருவர் கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு பதில் அளித்த ரஜினிகாந்த் ” ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக போய் கொண்டு இருக்கிறது” என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து படம் எப்போது வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கலாம்? என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு பதில் அளித்த ரஜினிகாந்த் “இன்னும் படகின் படப்பிடிப்பு 6 நாட்களில் மொத்தமாக முடிந்துவிடும். படம் வருவதற்கு அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்கள் ஆகிவிடும்” எனவும் தெரிவித்தார்.

மேலும், ஒருவர் திரைக் கலைஞர்களுக்கு வரும் கூட்டம் வாக்காக மாறுமா? என த.வெ. க தலைவர் விஜய் பிரச்சாரம் செய்து வருவதை வைத்தும் அவருக்காக வந்த கூட்டத்தை மையமாக வைத்தும் மறைமுகமாக இந்த கேள்வியை கேட்டார். இந்த கேள்விக்கு ரஜினிகாந்த் No Comments என சுருக்கமாக பதில்கூறி நழுவினார்.