தமிழ் சினிமாவில் அடுத்த மாதம் ஆரம்பித்தது முதல் பெரிய திரைப்படங்கள் வரிசையாக ரிலீசிற்கு காத்திருக்கின்றன. அதில் முதலில் வருவது அஜித்தின் நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 8ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
இப்படத்தை அடுத்து சாஹோ படம் தான் ஆகஸ்ட் 15இல் ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் படத்தின் வேலைகள் இன்னும் முடியாததால், படம் ஆகஸ்ட் 30க்கு தள்ளிப்போனது.
ஆதலால், முழுவதும் ரெடி ஆகி, ஆகஸ்ட் 30 ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட காப்பான் படம் அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னரே அதாவது ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.