ராமநாதபுரம், திருவாரூர், நாகை, கடலூர்,புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் ஆகிய 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
unknown nodeநவம்பர் 15 ஆம் தேதி அதாவது நாளை பிற்பகல் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் எனவும், இதனால் தமிழகம், புதுச்சேரியில் அதிக கனமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை மையம் எச்சரித்தது.கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில் கஜா புயல் நாளை கரையை கடக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம், திருவாரூர், கடலூர், நாகை,புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்று அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.