உலக யானைகள் தின ஸ்பெஷல்.! ஹைதிராபாத்தில் யானைகளுக்கு சூப்பர் விருந்து.!

ஹைதிராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் உள்ள யானைகளுக்கு, உலக யானைகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு உணவு தயாரித்து வழங்கப்பட்டது.

ஹைதிராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் உள்ள யானைகளுக்கு, உலக யானைகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு உணவு தயாரித்து வழங்கப்பட்டது.

உலக யானைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அதனை கொண்டாடும் விதமாக ஹைதிராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் உள்ள யானைகளுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.

ரவை, அரிசி, பழங்கள், காய்கறிகள், சோளம் உள்ளிட்டவை கலந்து செய்யப்பட்ட உணவு பரிமாறப்பட்டது. இதனை யானை பாகன்கள் தங்களது யானைகளுக்காக செய்திருந்தனர்.

ஆனால், யானைகள் விரும்பி சாப்பிடும், கரும்பு, அண்ணாசி பழம், தேங்காய் உள்ளிட்டவை இல்லை. இருந்தும், சிறப்பு விருந்தை யானைங்கள் உண்டு மகிழ்ந்தன. இதனை நேரு உயிரியல் பூங்கா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

&

unknown node