பிரதமர் நரேந்திரமோடி, பயிர் அறுவடைக்குப் பின் எஞ்சிய பகுதிகளைத் தீவைத்துக் கொளுத்தும் பழக்கத்தைக் கைவிடுமாறு உழவர்களுக்குப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது பயிர் அறுவடைக்குப் பின் எஞ்சிய பகுதிகளைத் தீவைத்துக் கொளுத்துவது ஒரு தவறான பழக்கம் என்று குறிப்பிட்டார். இந்தப் பழக்கத்தைக் கைவிடுவதற்காக உழவர்களுக்கு உதவ அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பயிர் வளரும்போது மண், காற்று, நீர், சூரிய ஒளி ஆகியவற்றில் இருந்து சத்துக்களை எடுத்துக்கொள்வதாகவும், பயிர்க்கழிவுகளைக் கொளுத்தும்போது இந்த அனைத்துச் சத்துக்களும் அழிந்துபோவதுடன் மண்வளமும் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். பயிர்க் கழிவுகளில் இருந்து வருமானம் பெறுகிற வழிகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.