புதுச்சேரி :தவெக மாநாட்டுப் பணிகளை பார்வையிட்டு வீடு திரும்பிய புதுச்சேரி மாநில செயலாளர் சரவணன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் விக்கிரவாண்டி சென்று மாலை வீடு திரும்பிய அவர், நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார்.
உடனே அவரை, குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரது மறைவிற்கு தவெகவினர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அஞ்சலிக்காக வைக்கபட்டறிந்த சரவணனின் உடலை பார்த்து, அவரது மறைவை தாங்க முடியாமல் தவெக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கண்ணீர் விட்டு கதறியுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
unknown nodeதமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27-ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ள நிலையில், புதுச்சேரி மாநில சரவணனின் மறைவு தவெகவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
