போதைல இருக்காரா? செத்துட்டாரா? மதுப்பிரியரால் ஷாக்கான போலீசார்... வைரலாகும் வீடியோ..!!

ஐதராபாத்:  கோவலகுண்டாவில் சுமார் 5 மணி நேரமாக தண்ணீரில் மிதந்த சடலமாக மிதந்த மனிதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Drunken man

ஐதராபாத்:கோவலகுண்டாவில் சுமார் 5 மணி நேரமாக தண்ணீரில் மிதந்த சடலமாக மிதந்த மனிதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

ஹைதராபாத்தில் உள்ள ஹனுமகொண்டாவில் எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு நீர் நிலையில் ஒரு ஆணின் உடல் 5 மணி நேரமாக மிதப்பதை கண்ட அங்குள்ள பொதுமக்கள் அதிர்ச்சியில் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர், தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் விரைவாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

அங்கு சென்ற இரண்டு கான்ஸ்டபிள்கள், ஆடாமல் அசையாமல் நீர்நிலையில் மிதந்த அந்த நபரை கண்டதும். அங்கிருந்த ஒரு போலீசார் நீர்நிலையில் மிதந்த அந்த நபரின் கையை பிடித்து இழுத்துள்ளார். அப்போது சட்டென தண்ணீரில் மிதந்த அந்த நபர் தலையை திருப்பி பார்த்துள்ளார். இதனால் அதிரிச்சியில் ஆழ்ந்த போலீசார் அவரை கறைக்கு அளித்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

பின்னர், அவரை உள்ளூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற விசாரணை நடத்தி உள்ளனர். அதில், ​​அவர் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. மேலும், அந்த நபர் தான் அருகில் உள்ள கிரானைட் குவாரிகளில் தான் வேலை செய்து வருவதாகவும், வெயிலின் வெப்பத்தை தணிக்கவே நீர்நிலையில் இப்படி தஞ்சம் அடைந்ததாகவும் கூறி இருக்கிறார். இது சம்மந்தமான வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown node