`டிக்டாக்' செயலி மீதான தடை நீக்கமா? – மத்திய அரசுவிளக்கம்.!

மத்திய அரசு டிக்டாக் மீதான தடையை நீக்குவதற்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

TikTok - Central Govt

டெல்லி :சீனாவை தளமாகக் கொண்ட வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான டிக்டாக் செயலியை பயன்படுத்தலாம் என்று பல பயனர்கள் தெரிவித்ததை அடுத்து, டிக்டோக் மீதான தடை நீக்கப்படவில்லை என்று மத்திய அரசாங்கம் தெளிவுபடுத்தின.

ஆம், இந்தியாவில் டிக்டாக் செயலி மீதான தடையை நீக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. டிக்டாக் தளம் மீண்டும் செயல்பட தொடங்கதியாகச் செய்திகள் பரவிய நிலையில் விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு மற்றும் தனியுரிமை கவலைகள் காரணமாக டிக்டாக் உள்ளிட்ட பல சீன ஆப்களை இந்தியா தடை செய்தது. கடந்த சில நாட்களாக டிக்டாக் செயலி மீதான தடை செய்யப்பட்டதாக தகவல் பரவி வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்யப்பட்ட சீனாவின் `டிக்டாக்’ செயலிக்கு அனுமதி அளிக்கவில்லை என்றும், இந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று அரசு உறுதிப்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, டிக் டாக் செயலியில் வீடியோக்களைப் பார்க்க அவர்களால் உள்நுழைய முடியவில்லை. வீடியோ ஸ்ட்ரீமிங் தளத்தின் பயன்பாடு ஆப் ஸ்டோர்களில் கிடைக்கவில்லை.