மூணாறு நிலச்சரிவு: பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்வு – பினராயி விஜயன்

கேரள நிலச்சரிவு பலி எண்ணிக்கை 26 பேர் ஆக அதிகரிப்பு.

கேரள நிலச்சரிவு பலி எண்ணிக்கை 26 பேர் ஆக அதிகரிப்பு.

கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதிலும்,  இடுக்கி மாவட்டத்தில்தொடந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அங்கு 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.

ராஜமலை பெட்டிமுடி கன்ணண் தேவன் டீ எஸ்டேட்டில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டதில் சுமார் 20 வீடுகள் மண்ணில் புதைந்தன. இந்த தோட்டத்தில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் தமிழகத்தை சார்ந்தவர்கள்.

ராஜமலையில் இடுகியில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் தேசிய பேரிடர் மறுமொழிப் படை (என்.டி.ஆர்.எஃப்) மீட்புப் பணிகளைத் தொடங்கின.

இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது என அம்மாநில முதல்வர் . பினராயி விஜயன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.