தினமும் 40-50 குழந்தைகள் வரை மருத்துவமனையில் அனுமதி – கொல்கத்தா!

According to the hospital, 40 to 50 children are admitted to Jalpaiguri Hospital in Kolkata every day due to poor health.

கொல்கத்தாவிலுள்ள ஜல்பைக்குரி மருத்துவமனையில் தினமும் 40 முதல் 50 குழந்தைகள் வரை உடல்நல குறைவால் அனுமதிக்கப்படுவதாக சுகாதர அதிகாரி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள ஜல்பைகுரி என்னும் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நல வார்டில் கடந்த நான்கு நாட்களாக தினமும் 40 முதல் 50 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு வருவதாக சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த அதிகாரி கூறுகையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட கூடிய 90 சதவீத குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், அவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி  செய்யப்பட்டதாகவும், தற்போது இந்த குழந்தைகள் புதிதாக பிறந்த குழந்தை பராமரிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பலருக்கு காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த குழந்தைகளுக்கு மலேரியா மற்றும் டெங்கு சோதனைகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், குழந்தைகளுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்படுவதற்கு காரணம் என்ன என்பது குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிக அளவில் குழந்தைகள் அனுமதிக்கப்படுவதால் மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதாகவும், இதனை போக்குவதற்காக புதிதாக வார்டு கடந்த வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நோய் பரவலுக்கு இன்புளூயன்சா வைரஸ் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.