டெல்லி போலீசார் உலகிலேயே மிக குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வழங்குவதாக அறிவித்தவரை கைது செய்துள்ளனர். ரிங்கிங் பெல்ஸ் (Ringing Bells) நிறுவனர் மோஹித் கோயலை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உலகத்திலேயே மிகவும் குறைந்த விலையில் 251 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்வதாக ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த மலிவு விலை போனுக்காக 30,000 பேர் பணம் செலுத்தி பதிவு செய்துள்ளனர். மேலும் 7 கோடிப்பேர் ஸ்மார்ட்போன் பெறுவதற்காக முன்பதிவு செய்துவைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அந்நிறுவனத் தலைவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது ஸ்மார்ட்போன் முன்பதிவு செய்தவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.