18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு:எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆபத்து இருக்கா,இல்லையா?யாருக்கு தீர்ப்பு சாதகம்?பாதகம்?

உயர்நீதிமன்றம்  எம்எல்ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பளித்தால், அரசுக்கு தற்போதைக்கு ஆபத்து இல்லை.

உயர்நீதிமன்றம்  எம்எல்ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பளித்தால், அரசுக்கு தற்போதைக்கு ஆபத்து இல்லை.

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ.க்களை கழித்துவிட்டுப் பார்க்கும்போது, சட்டப்பேரவையின் பலம் 216 ஆக உள்ளது. இதில் சபாநாயகரையும் சேர்த்து அதிமுக-வின் பலம் 117 ஆக உள்ளது. இந்த 117 எம்எல்ஏ.க்களில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கருணாஸ், தனியரசு, தமீமுன் அன்சாரி ஆகிய 3 பேரும் அரசுக்கு எதிரான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

அதேசமயம்,அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி, விருதாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு ஆகிய மூவரும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். இந்த 6 எம்எல்ஏ.களையும் கழித்துவிட்டுப் பார்த்தால், அதிமுகவுக்கு 111 எம்எல்ஏ.க்கள் ஆதரவு உள்ளது.

இதுதவிர திமுகவுக்கு 89 எம்எல்ஏ.க்களும், காங்கிரசுக்கு 8 எம்எல்ஏ.க்களும், இந்திய யூனியன் முஸ்லீக் எம்எல்ஏ. ஒருவரும் உள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்ற டிடிவி தினகரன் சுயேட்சை எம்எல்ஏ ஆக உள்ளார்.

இந்நிலையில், 18 எம்எல்ஏ.க்களையும் தகுதிநீக்கம் செய்தது செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டால், அரசுக்கு ஆபத்து இல்லை. ஏனெனில் 216 எம்எல்ஏ.க்கள் கொண்ட பேரவையில், பெரும்பான்மைக்கு தேவைப்படும் 109 எம்எல்ஏ.க்களை காட்டிலும் அதிகமாக அதிமுக-வுக்கு 111 எம்எல்ஏ.க்கள் ஆதரவு உள்ளது. எனவே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

18 எம்எல்ஏ.க்களும் தகுதிநீக்கம் செய்யப்பட்டது ரத்து செய்யப்பட்டால், பேரவையின் மொத்த பலம் 234 ஆக இருக்கும். அப்போது அரசுக்கு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 118 எம்எல்ஏ.க்கள் ஆதரவு தேவைப்படும். ஆனால், சபாநாயகரையும் சேர்த்து 111 எம்எல்ஏ.க்கள் மட்டுமே அதிமுக அரசுக்கு ஆதரவாக உள்ளனர். இந்த நிலையில், எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்து தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏ.க்களும் அரசுக்கு எதிராக வாக்களித்தால் அரசுக்கு பிரச்சனை ஏற்படும்.

ஒருவேளை 18 எம்எல்ஏ.க்களும் தகுதிநீக்கம் செய்யப்பட்டது ரத்து செய்யப்பட்ட பிறகும், அவர்களில் குறைந்தது 7 பேர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தாலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றிபெற்றுவிடும். இதேபோல, 18 எம்எல்ஏ.க்களில் கணிசமானோர் வாக்கெடுப்பில் பங்கேற்காவிட்டாலும் அரசுக்கு ஆபத்து இல்லை.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.