அதிமுக ஆலமரம் போல் நிலைத்து நிற்கும் கட்சி!

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  திமுக உள்ளிட்ட எத்தனை கட்சிகள் விமர்சித்தாலும், ஆலமரம் போன்று நிலைத்து நிற்கும் கட்சி அதிமுக என கூறியுள்ளார்.

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  திமுக உள்ளிட்ட எத்தனை கட்சிகள் விமர்சித்தாலும், ஆலமரம் போன்று நிலைத்து நிற்கும் கட்சி அதிமுக என கூறியுள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழக அரசு இதுவரை எந்த அரசும் செய்யாத அளவில் நலத்திட்டங்களை நிறைவேற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.