அரசியலில் இருந்து ஒருவருடத்திற்கும் மேல் ஒதுங்கி இருக்கும் தி.மு.க. தலைவா் கருணாநிதி 3 மாதங்களுக்கு பின்னா் இன்று மீண்டும் அண்ணா அறிவாலயம் வந்தாா்..
இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான தி.மு.க. தலைவா் கருணாநிதி கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்று இருக்கிறார் .தொடா்ந்து மருத்துவ சிகிச்சைகளை வீட்டில் இருந்தபடியே பெற்று வரும் கருணாநிதி இன்று மீண்டும் அண்ணா அறிவாலயத்திற்கு வந்தாா்.
அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ள கருணாநிதிக்கு தொடா்ந்து பேச்சு பயிற்சி உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னா் கருணாநிதி தனது பேரனின் மகன் மகிழனுடன் கிாிக்கெட் விளையாடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின.