சட்டப்பேரவை தேர்தல் -3 மணி நிலவரப்படி 70 சதவிகிதம் வாக்குப்பதிவு!

இன்று (2026) நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவு.

Hero Image

சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 23, 2026) காலை 7 மணி முதல் தொடங்கிய நிலையில், பிற்பகல் 3 மணி வரையிலான நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் 70% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் அதே நேரத்தில் பதிவான 53.35% வாக்குப்பதிவை விட சுமார் 16.65 சதவீதம் அதிகமாகும்.

இந்த முறை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை இந்த புள்ளிவிவரம் தெளிவாகக் காட்டுகிறது.

மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு நிலவரம் (பிற்பகல் 3 மணி)

சென்னை - 68.13%

நாமக்கல் - 76.43% (மாநிலத்திலேயே அதிக வாக்குப்பதிவு)

கன்னியாகுமரி - 61.95% (மாநிலத்திலேயே குறைவான வாக்குப்பதிவு)

அதிக வாக்குப்பதிவு பதிவான மாவட்டங்கள் (Top 5)

நாமக்கல் - 76.43%

கரூர் - 76.08%

சேலம் - 75.79%

ஈரோடு - 75.61%

திருப்பூர் - 75.38%

இந்த ஐந்து மாவட்டங்களும் மேற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. இங்கு வாக்காளர்கள் அதிக ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வருகை தந்துள்ளனர்.மொத்தத்தில், இந்த முறை காலை முதல் மாலை வரை வாக்குப்பதிவு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது.

பல இடங்களில் காலையிலேயே நீண்ட வரிசைகள் காணப்பட்டதால், வாக்குப்பதிவு வேகம் அதிகரித்துள்ளது. வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ள நிலையில், இன்னும் மூன்று மணி நேரம் உள்ளது. இந்த நேரத்தில் இன்னும் அதிக வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் அதிகாரிகள், அமைதியான மற்றும் சுமூகமான வாக்குப்பதிவை உறுதி செய்ய தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.