சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கையில், சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளார்.
கொளத்தூர் தொகுதியில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) வேட்பாளர் வி.எஸ்.பாபு, மு.க.ஸ்டாலினை 9,116 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றி பெற்றுள்ளார். இந்தத் தோல்வி தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொளத்தூர் தொகுதி, மு.க.ஸ்டாலினின் தொகுதியாக இருந்து வந்தது.
பல ஆண்டுகளாக அவர் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்று வரும் நிலையில், இந்த முறை தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோல்வியடைந்தது திமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம், தவெக தலைவர் விஜய்யின் கட்சி சென்னை மண்டலத்தில் தனது செல்வாக்கை வலுவாக நிலைநாட்டியுள்ளது. வி.எஸ்.பாபு, தவெக சார்பில் போட்டியிட்ட முதல் முறையிலேயே முதலமைச்சரை தோற்கடித்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.
தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியாகாத நிலையில், மு.க.ஸ்டாலினின் தோல்வி திமுக கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தவெகவின் எழுச்சி தமிழக அரசியலை மாற்றியமைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்த அதிர்ச்சி முடிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
