“திமுக நாடகக் கம்பெனியின் நடிப்பு எரிச்சலூட்டுகிறது” – பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.!

திமுக எனும் நாடகக் கம்பெனியின் நடிப்பு எல்லை கடந்து நம்மை எரிச்சலூட்டுகிறது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறார்.

MK Stalin - Nainar Nagendran

சென்னை :திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,”ஆளும் அரசின் சத்துணவுத் திட்டத்தைக் கண்டு அதிசயிக்கும் திமுக தலைவர்களும், பிரமுகர்களும் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைப்பார்களா?

அல்லது அரசுப் பள்ளிகளில் வழங்கும் சத்துணவை ஒருவேளைக்காவது உண்பார்களா? திமுக எனும் நாடகக் கம்பெனியின் நடிப்பு எல்லை கடந்து நம்மை எரிச்சலூட்டுகிறது. விளம்பர மோகம் தலைக்கேறிய விடியா அரசு வீழும் காலம் நெருங்கிவிட்டது.

திரைப் பிரபலங்களை வைத்து விழா எடுத்தால் நிர்வாகத் தோல்வியை மக்கள் மறந்துவிடுவார்களா? திராவிட மாடல் எனும் போலி பிம்பத்திற்குள் அடைத்து தமிழகத்தை அழிவை நோக்கி இழுக்க முயற்சி. திமுக எனும் நாடகக் கம்பெனியின் நடிப்பு எல்லை கடந்து நம்மை எரிச்சலூட்டுகிறது” என்று திமுகவை விமர்சித்தார்.

தொடர்ந்து  பேசிய அவர், ”டிசம்பர் மாதத்திற்குள் கூட்டணி முழுமையாக அமைந்துவிடும், ஸ்ரீவில்லிபுத்தூரில் சாமி தரிசனம் செய்துவிட்டு யாத்திரையை துவங்கி மதுரையில் இருந்து பயணம் மேற்கொள்கிறேன்” என்றார்.