சென்னை :தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வரும் 6ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு புயலாக வலுப்பெற சாத்தியம் இல்லை எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஜன. 2வது வாரத்தில் டெல்டா-தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாதம் தமிழகத்தில் மழை பெய்த நிலையில், டிசம்பர் முடிந்து ஜனவரி பிறந்துள்ள நிலையில், மீண்டும் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. உதாரணமாக, நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த மழை; 21 செ.மீ மழைப்பொழிவு பதிவுகோத்தகிரியில் 11 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
அதைப்போல, தென்காசி மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதன் காரணமாக, குற்றால அருவிகளில் நேற்றிரவு வெள்ளமும் ஏற்பட்டது. இப்போது வெள்ளப் பெருக்கு சற்று குறைந்தாலும், அதிகளவில் தண்ணீர் விழுவதால் பாதுகாப்பு கருதி குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. 02-01-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
03-01-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 04-01-2026 மற்றும் 05-01-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
06-01-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 07-01-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
