விருதுநகர் :தவெகவின் 2-வது மாநாடு நாளை மதுரையில் நடக்கவிருக்கும் நிலையில், கட்சி தொண்டர்கள் பல இடங்களிலும் பேனர் வைத்து வருகின்றனர்.
அந்த வகையில், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுரையில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழக (தவெக) மாநாட்டிற்கு வரவேற்பு பேனர் வைக்க முயன்ற கல்லூரி மாணவர் காளீஸ்வரன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். உயிரிழந்த இவர், தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் வன்னியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்தது. மாணவர் பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சார வயர் தொட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இது குறித்து வன்னியம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
