செங்கோட்டையன் போன்றவர்கள் மக்கள் இயக்கத்தில் பணியாற்றினார்களா? திமுகவில் இணைந்த பி.டி.செல்வக்குமார்!

விஜயின் மக்கள் இயக்கத்திற்கு தூணாக இருந்தவன் நான் என திமுகவில் இணைந்த விஜயின் முன்னாள் மேலாளர் பி.டி. செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.

p.t. selvakumar

சென்னை :தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளரும், கலப்பை மக்கள் இயக்கத் தலைவருமான பி.டி.செல்வக்குமார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார். 2003-ஆம் ஆண்டு முதல் விஜய்யின் மக்கள் தொடர்பு அலுவலராக (பிஆர்.ஓ) பணியாற்றியவர், ‘புலி’, ‘சுறா’, ‘வில்லு’, ‘போக்கிரி’ போன்ற படங்களுக்கு விஜய்யின் பிஆர்.ஓவாகவும், ‘புலி’ படத்தின் தயாரிப்பாளராகவும் இருந்தார்.

இவரது இணைப்பு தவெகவுக்கு பின்னடைவாகவும், திமுகவுக்கு வலுவூட்டலாகவும் அமையும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செல்வக்குமார் தனது கலப்பை மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோருடன் திமுகவில் இணைந்தார். இது தவெகவின் முதல் பெரிய வெளியீடாக அமைந்துள்ளது. செல்வக்குமார், “விஜய் ரசிகராக இருந்து 9 பத்திரிகைகளை (‘ப்ரியமுடன் விஜய்’ உள்ளிட்டவை) நடத்தினேன்.

விஜய்யின் அப்பாவையே அவரிடம் இருந்து பிரித்தார்கள். நிர்மல் குமார், ஆனந்த், ஆதவ் , செங்கோட்டையன்  எல்லாம் எப்போது ரசிகர் மன்றத்தில் இருந்தார்கள்? எனக்கு போஸ்டர் ஒட்டியவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் என்று விஜய் சொன்னார்” என்று விஜய்யை கடுமையாக விமர்சித்தார்.செல்வக்குமார் தொடர்ந்து, “விஜய் வீட்டில் வருமான வரித்துறை வந்ததற்கு அவருடன் இருப்பவர்கள் கொடுத்த தகவல் தான் காரணம். அவரிடம் இதை சொல்லலாம் என்றாலும் விடமாட்டார்கள்” என்று குற்றம் சாட்டினார்.

இது தவெக உள்கட்சி குழப்பத்தை வெளிப்படுத்துகிறது. திமுக தலைமை, செல்வக்குமாரை வரவேற்று, “அவரது அனுபவம் கட்சிக்கு பயன்படும்” என்று தெரிவித்தது.இந்த இணைப்பு 2026 தேர்தலுக்கு முன்னதாக திமுகவின் வலிமையை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. செல்வக்குமார், விஜய்யின் அரசியல் பயணத்தின் ஆரம்ப காலத்தில் இருந்தவர் என்பதால், அவரது விமர்சனங்கள் தவெகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.