காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காலமானார்!

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

evks elangovan

சென்னை :ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவும், காங்கிரஸ் மூத்த தலைவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்  உடல்நலக்குறைவு  காரணமாக சென்னை மணப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை மோசமடைந்து வந்த நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் சிகிச்சை பலனின்றி தற்போது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உயிரிழந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான இளங்கோவனின் மரணம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் சொந்த ஊரான ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.