சென்னை:கடந்த 24 மணி நேரத்தில் சென்னை பெருங்குடியில் 8 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு வங்கக்கடல், வட தமிழகத்தை நோக்கி நகர்ந்தது. இப்பொது, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
மேலும், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதனை தொடர்ந்து, நாளையும் சென்னை உட்பட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் முன்னறிவித்துள்ளது.
