“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்படி செயல்படுவேன்” – கமல்ஹாசன் எம்.பி.!

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கலந்துரையாடிய பின்னரே தெரிவிப்பேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Kamal Haasan MP - MK STALIN

சென்னை :மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்படி செயல்படுவேன் என்று கூறியிருப்பது தமிழக அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்தக் கருத்து அவரது கட்சியின் அரசியல் நிலைப்பாடு மற்றும் திமுகவுடனான கூட்டணி அல்லது ஒத்துழைப்பு குறித்து பேசப்படுகிறது.

சென்னையில் இன்று செய்தியாளர் சந்திப்பின் போது, கமலிடம் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு? என்று கேள்வி எழுப்பியதற்கு, கமல்ஹாசன் “குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கலந்துரையாடிய பின்னரே தெரிவிப்பேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “நான் டெல்லிக்கு சென்றது தமிழர்களுக்கு பயன்களை கொண்டு வருவதற்கு தான். எனக்கு நாடும் முக்கியம் தமிழ்நாடும் முக்கியம். எங்கள் கூட்டணியோடும் எனக்கும் தமிழர்களுக்கும் நெருக்கமான முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுடனும் கலந்துரையாடிய பின்னரே குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை தெரிவிப்பேன்”