பாஜகவிற்கும் கே.சி.பழனிசாமி நீக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!

அமைச்சர் ஜெயகுமார், அதிமுக தலைமை பதில் கூற வேண்டிய விவகாரத்தில் கே.சி .பழனிச்சாமி தன்னிச்சையாக செயல்பட்டதால்தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக  விளக்கம்

அமைச்சர் ஜெயகுமார், அதிமுக தலைமை பதில் கூற வேண்டிய விவகாரத்தில் கே.சி .பழனிச்சாமி தன்னிச்சையாக செயல்பட்டதால்தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக  விளக்கம் அளித்துள்ளார்.

கே.சி.பழனிசாமி நீக்கத்திற்கும் பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், அவரை நீக்கியது கட்சியின் கொள்கை முடிவு என்றும் கூறிய ஜெயகுமார், நடுவர் மன்ற ஆணைப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதில், தமிழக அரசு உறுதியான நிலைப்பாட்டில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

நெல்லிக்காய் கொத்திலிருந்து சிதறுவது போல, ஒவ்வொருவராக டிடிவி தினகரன் அணியிலிருந்து விலகி வருவார்கள் என்றும், தினகரன் கடைசியில் தனியாக நிற்பார் என்றும், நாஞ்சில் சம்பத் விலகல் குறித்த கேள்விக்கு ஜெயகுமார் பதிலளித்தார்.

எம்.ஜி.ஆர், அண்ணாவை புறக்கணித்துவிட்டு டிடிவி தினகரனால் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.