சென்னை :தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளை தொடங்கி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி கிட்டத்தட்ட 170 தொகுதிகளில் பிரசாரங்களை முடித்துள்ளார். “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன் நடத்தப்படும் இந்தப் பிரசாரங்கள், அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அந்த வகையில், நேற்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பழனிச்சாமி தொண்டர்களிடம் தனது பேச்சைத் தொடங்கினார். இந்தக் கூட்டம், அதிமுகவின் எதிர்கால உத்திகளை மறைமுகமாக வெளிப்படுத்தியது. நாமக்கல் கூட்டத்தில் த.வெ.க. கொடிகள் பறந்ததைப் பார்த்து, பழனிச்சாமி “அங்க பாருங்க கொடி பறக்குது.. பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க..” என்று கூறி தொண்டர்களை சிரிக்க வைத்தார்.
இந்தப் பேச்சு, த.வெ.க. உடனான சாத்தியமான கூட்டணியை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது. கூட்டத்தில் த.வெ.க. தொண்டர்கள் ஆரவாரமாக வரவேற்றனர். குமாரபாளையம் பகுதியில் ஏற்பட்ட இந்த எழுச்சி, முதல்வர் மு.க. ஸ்டாலினின் செவியை கிழிக்கும் என்று பழனிச்சாமி சந்தோஷமாகக் கூறினார். இது அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.
அதனை தொடர்ந்து உரையாற்றிய பழனிசாமி, திமுக.வினர் கூட்டணியை மட்டுமே நம்பி உள்ளனர் எனவும் சாடி பேசினார். மேலும், ” கூட்டணி எனது முக்கியம் தான். ஆனால் கூட்டணி மட்டுமே வெற்றியை தேடித்தரும் என்று நினைக்கக்கூடாது . அதிமுக தலைமையில் அமைக்கப்படுகின்ற கூட்டணி வலுவாக கூட்டணியாக இருக்கும் என்று கூறிய போது அங்கு அசைக்கப்பட்ட தமிழக வெற்றி கொடியை பார்த்து “அங்க பாருங்க கொடி பறக்குது, பிள்ளையார் சுழி போட்டாங்க என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
