அதிகார குவியல்களால் ஒன்றிய அரசுக்கு ரத்த கொதிப்பு, மாநில அரசுக்கு ரத்த சோகை – மு.க.ஸ்டாலின்!

மாநில உரிமைகள் பறிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

mk stlain

சென்னை :மாநில சுயாட்சி குறித்த கருத்தரங்கை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ”மாநில சுயாட்சி குறித்த முதல் தேசிய கருத்தரங்கை தமிழ்நாடு அரசு சார்பில் தொடங்கி வைப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழ் மண்ணுக்கு என்று பல சிறப்புகள் இருக்கிறது. சமூக நீதியை எடுத்து சொல்லுகிற மண் தமிழ்நாடு. தமிழ்நாட்டின் அரசியல் என்பது சமூகநீதியை பின்பற்றியே இருக்கிறது.

மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்காமல் ஒன்றிய அரசு தன்னிச்சையாக செயல்படுவதோடு, இந்தியாவில் பாஜக ஆளாத மாநிலங்கள் மீது அதிகார குவிப்புகளில் ஈடுபட்டு வருவதாக சர்க்காரியா கமிஷன் கூறியது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான பயன்கள் அனைவருக்கும் சென்று சேர்ந்துள்ளது, ஒன்றிய அரசுக்கு அதிக வருமானம் ஈட்டி தரும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

ஆனால், உரிய நிதி பங்கை வழங்காமல் குறுகிய அரசியல் நோக்குடன் செயல்படுகிறது, பல்வேறு நெருக்கடிகளை மீறி தமிழ்நாட்டை உயர்த்தி வருகிறோம். தமிழ்நாட்டின் அரசியல் சமூகநீதி அரசியல், அனைத்து மக்களுக்கான சமூகநீதி அரசாக திமுக உள்ளது. பெண்ணுரிமை, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு தொடர்ந்து முதன்மை மாநிலமாக இருக்கிறது.

அளவுக்கு மீறிய அதிகார குவியல்களால் ஒன்றிய அரசுக்கு ரத்த கொதிப்பும், மாநில அரசுகளுக்கு ரத்த சோகையும் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான பயன்கள் அனைவருக்கும் சென்று சேர்ந்துள்ளது. திராவிட மாடல் ஆட்சியின் 4.5 ஆண்டுகளில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். ஒன்றிய அரசு குறுகிய எண்ணத்தோடு செயல்படுகிறது. ஒன்றிய அரசுக்கு அதிக வரி வருவாயை ஈட்டித் தரும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

அதிகார குவியல்களால் ஒன்றிய அரசுக்கு ரத்த கொதிப்பு, மாநில அரசுக்கு ரத்த சோகை – மு.க.ஸ்டாலின்!