உறுப்பினர் சேர்க்கை படிவம் பொய்யானது – தமிழக வெற்றிக் கழகம்.!

VIJAY

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை படிவம் என பரவி வரும் இந்த படிவம் பொய்யானது என கட்சியின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 2-ம் தேதி நடிகர் விஜய் கட்சியை தொடங்கியதை அடுத்து, கட்சியின் செய்லபாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில், சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், கட்சியின் தலைவர் விஜய் காணொளி வாயிலாக கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல் வழங்கியதாக கூறப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்கு செயலி ஒன்று உருவாக்கப்படவுள்ளதாகவும், செயலியை அடுத்த வாரம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனிடையே, கட்சியின் உறுப்பினர் சேர்க்கை படிவம் ஒன்று இணையத்தில் பரவி வந்துள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை முழுக்க முழுக்க கட்சி சார்பில், அறிமுகம் செய்யப்பட உள்ள செயலி மூலம் மட்டுமே நடைபெறும். தற்பொழுது, சமூக வலைத்தளங்களில் உறுப்பினர் சேர்க்கை படிவம் என பரவி வரும் படிவம் பொய்யானது தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது.

READ MORE – விஜய் பிறந்தநாளில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு?

இதற்கிடையில், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 22-ம் தேதி மதுரை மாவட்டத்தில் கட்சியின் முதல் மாநாட்டை நடத்த இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கிய பின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி மற்றும் சின்னம் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வேலை தமிழக வெற்றிக் கழக மாநாடு உறுதி என்றால், அப்போது இதெல்லாம் அறிவிக்க வாய்ப்புள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்