"செந்தில் பாலாஜியை திருடன் என்று சொன்ன முதல்வர் இப்போது பாராட்டுகிறார்" – அண்ணாமலை விமர்சனம்.!

செந்தில் பாலாஜியை திருடன் என்று சொன்ன முதல்வர் இப்போது பாராட்டுகிறார் திமுகவுக்கு எடுபிடியாகிவிட்டது காங்கிரஸ் கட்சி என்று அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

Annamalai - BJP

சென்னை :சென்னையில் இன்று செய்தியாளர் சந்தித்து பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, ”திமுக முப்பெரும் விழாவில் உலக மகா உத்தமர் செந்தில் பாலாஜி என்று முதல்வர் ஸ்டாலின் சான்று கொடுத்துள்ளார். எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் கரூருக்கு ஸ்டாலின் வந்தபோது, செந்தில் பாலாஜியை விமர்சித்தார்.

சாராயம் விற்ற காசில் கரூரில் முப்பெரும் விழா நடத்தப்பட்டது. மண் குதிரையில் அமர்ந்து காவிரியை கடக்க ஸ்டாலின் முயற்சிக்கிறார். உலக மகா உத்த மர் செந்தில் பாலாஜி என முதலமைச்சர் சான்றிதழ் கொடுத்துள்ளார்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவை சிலர் கபளீகரம் செய்ய முயன்றபோது, பாஜக தான் தங்களுக்கு உறுதுணையாக இருந்தது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்து வரவேற்கத்தக்கது, அதை நான் வரவேற்கிறேன்.

2016 – 17ல் பாஜக என்ன செய்தது என்பதை இபிஎஸ் மக்கள் மன்றத்தில் கூறியுள்ளார். தமிழகத்தில் நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகவே பாஜக இருக்கிறது என்பது எடப்பாடி பழனிசாமியின் கூற்று மூலம் நிரூபணமாகியுள்ளது.  இன்றைக்கு திமுகவுக்கு எடுபிடியாக தமிழகத்தில் ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது காங்கிரஸ் கட்சிதான்.

அந்த காங்கிரஸ் கட்சியின் பெயரை ‘தமிழக எடுபிடி கட்சி” என்று மாற்றிவிடலாம் என்று பாஜக மீதான செல்வப்பெருந்தகை விமர்சனத்திற்கு இவ்வாறு அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.