திருவாரூர் தொகுதியில் பிப்ரவரி 7-ஆம் தேதிக்குள் இடைத்தேர்தல் ..!தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

திருவாரூர் தொகுதியில் பிப்ரவரி 7-ஆம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று  உறுதி அளித்துள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி.

திருவாரூர் தொகுதியில் பிப்ரவரி 7-ஆம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று  உறுதி அளித்துள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி.

திருவாரூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக இறந்தார்.இந்நிலையில் அந்த தொகுதிக்கு தேர்தல் நடைபெறும் சூழ்நிலை உள்ளது.

மேலும் திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏவாக இருந்த மறைந்த அதிமுக எம்எல்ஏ  ஏகே போஸ் மாரடைப்பால் உயிரிழந்தார் .இந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உள்ளது.

unknown node

இந்நிலையில் இருதொகுதிகள் தேர்தல் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.அதில்,  திருவாரூர் தொகுதியில் பிப்ரவரி 7-ஆம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று  உறுதி அளித்துள்ளார்.அதேபோல் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தீர்ப்பு வந்ததும் தேதி அறிவிக்கப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.