கரூர் எல்லையில் எதிர்பாரா ஆச்சரியம்... உடனே வெளியே வந்த தவெக தலைவர் விஜய்.!

கரூர் நகருக்குள் நுழையும் போது பிரச்சார பேருந்தின் மேலே வந்து தொண்டர்களுடன் விஜய் சந்தித்தார்.

Karur - Namakkal

கரூர் :நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், 2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். விஜய், தனது 2026 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே பிரசாரம் செய்துள்ளார். கரூரில் அவரது வருகை தவெக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்பொழுது, கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பிரசாரத்திற்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். இன்று மதியம் 3 மணியளவில் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற இந்த பிரசாரத்தில், தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். பிரசாரத்திற்கு கடும் நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் வழியில் கட்டுக்கடங்காத தொண்டர்கள் கூட்டத்தை பார்த்து திடீரென பிரச்சார பேருந்தை நிறுத்தி மேலே ஏறி விஜய் தொண்டர்களை நோக்கி கை அசைத்தார். வாகனங்களில் பின் தொடரக்கூடாது, கட்டடங்களில் ஏறக் கூடாது உள்ளிட்ட விதிமுறைகளை கடைபிடிக்குமாறு தவெக தலைமை உத்தரவிட்டிருந்த நிலையில், தொண்டர்கள் விதிகளை மீறி வருகின்றனர்.