டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான் கார்டு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதி, வரி ஏய்ப்பு மற்றும் போலி பான் கார்டு பயன்பாட்டைத் தடுக்கவும், நிதி பரிவர்த்தனைகளை வெளிப்படையாக்கவும் உருவாக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ஏற்கெனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள், தங்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலக்கெடு டிசம்பர் 31, […]
டெல்லி : நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21, 2025 முதல் ஆகஸ்ட் 21, 2025 வரை நடைபெறும் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடர், முக்கியமான சட்ட மசோதாக்கள் மற்றும் அரசின் கொள்கை விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் ஒரு முக்கிய அமர்வாக இருக்கும். பொதுவாக, மழைக்கால கூட்டத்தொடர் பொருளாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் சமூக நலன் தொடர்பான மசோதாக்களை முன்னிலைப்படுத்துகிறது. இந்த அமர்வு, நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார சூழலில் கவனம் […]
டெல்லி : ஓலா, உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் “Peak hours” நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான புதிய விதிமுறைகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றைத் தவிர, கூடுதலாக விதிகளைச் சேர்க்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. இந்த முடிவு, அதிக தேவை உள்ள நேரங்களில் இந்த நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்க உதவும் என்றாலும், பயனர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம்” (Employment Linked Incentive – ELI) மத்திய அமைச்சரவையால் 2025 ஜூலை 1 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் திட்டம், அனைத்து முறைசார் துறைகளிலும், குறிப்பாக உற்பத்தித் துறையில், 3.5 கோடிக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், புதிதாக […]
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், ஜூலை 2 முதல் 9, 2025 வரை 8 நாள் அரசுமுறைப் பயணமாக கானா, ட்ரினிடாட் மற்றும் டொபாகோ, அர்ஜென்டினா, நமீபியா, மற்றும் பிரேசில் ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் முக்கிய அம்சமாக, பிரேசிலில் ரியோ டி ஜெனிரோவில் ஜூலை 6 மற்றும் 7ஆம் தேதிகளில் நடைபெறும் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். […]
ஆந்திரா : 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதி அபுபக்கர் சித்திக், ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் தமிழ்நாடு காவல்துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவு (ATS) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 1995 முதல் பல்வேறு வெடிகுண்டு சம்பவங்கள் மற்றும் மத ரீதியான கொலைகளில் தொடர்புடைய இவர், 2011இல் மதுரை-திருமங்கலம் வழியாக முன்னாள் பிரதமர் எல்.கே. அத்வானியின் ரத யாத்திரையின் போது பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் முக்கிய தேடப்பட்டவர் ஆவார். அபுபக்கர் சித்திக்குடன், திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்த […]
ஹைதராபாத்: தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பசாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி கெமிக்கல்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் 2025 ஜூன் 30 அன்று ஏற்பட்ட பயங்கர வெடிப்பு மற்றும் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45-ஆக உயர்ந்துள்ளது. முதற்கட்டமாக, வெடிப்பினால் ஏற்பட்ட தீயில் 10 பேர் கருகி உயிரிழந்த நிலையில், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவர்களில் மேலும் பலர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து காலை 9:20 மணியளவில், தொழிற்சாலையில் […]
டெல்லி: எண்ணெய் நிறுவனங்கள், வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை ரூ.58.50 குறைத்து, 2025 ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளன. இந்த விலை குறைப்பு, நள்ளிரவு முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது. 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டர்களுக்கு மட்டும் இந்தக் குறைப்பு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, சர்வதேச எண்ணெய் விலை குறைவு மற்றும் புழக்கத்தில் உள்ள பொருளாதார நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தன. உதாரணமாக, […]
டெல்லி : இந்திய ரயில்வே அமைச்சகம், நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு 2025 ஜூலை 1 (இன்று) முதல் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது. இந்த உயர்வின்படி, பயணக் கட்டணம் கிலோமீட்டருக்கு அரை பைசா (0.5 பைசா) அதிகரிக்கப்படுகிறது. இந்த முடிவு, ரயில்வேயின் செயல்பாட்டு செலவுகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு தேவைகளை சமாளிக்கும் வகையில் எடுக்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு, பயணி ரயில்கள், எக்ஸ்பிரஸ், சூப்பர் ஃபாஸ்ட் மற்றும் மெயில் ரயில்களில் உள்ள அனைத்து […]
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று மாலை 5.15 மணிக்குப் புறப்பட்டபோது ரத்து செய்யப்பட்டது. ஓடுபாதையில் செல்லும்போது கோளாறு கண்டறியப்பட்டதால், பயணிகள் பாதுகாப்பு கருதி விமானம் நிறுத்தப்பட்டது. பின்னர், பயணிகள் இறக்கிவிடப்பட்டனர், இதையடுத்து விமானம் விமான நிலையத்தின் பார்க்கிங் பகுதிக்கு மாற்றப்பட்டது. இதில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் உட்பட 70 பயணிகள் இருந்தனர். பயணிகளில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் […]
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும் குறைவான 2ம் வகுப்பு பயணத்திற்கு கட்டண உயர்வு இல்லை. 500 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கும் பயணிகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு 0.5 பைசா உயர்த்தட்பட்டுள்ளது. இது பல ஆண்டுகளுக்குப் பிறகு பயணிகள் ரயில் கட்டணத்தில் உயர்த்தப்படும் முதல் முறை உயர்வாகும். ரயில்வேயின் இயக்க செலவுகள், எரிபொருள் செலவுகள், மற்றும் பராமரிப்பு செலவுகள் உயர்ந்து வருவதால், இந்த கட்டண […]
மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றனர். பிற்பகல் 2 மணியளவில் மோங்ஜாங் கிராமத்திற்கு அருகே இந்த தாக்குதல் நடந்தது. இது குறித்து போலீசார் கூறுகையில், தாக்குதல் நடத்தியவர்கள் பதுங்கியிருந்து இந்த சம்பவத்தை நடத்தியதாக தெரிவித்தனர். மேலும், இந்த தாக்குதல் நடத்தியவர்கள் மிக அருகில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. குறிப்பாக, சம்பவ இடத்திலிருந்து 12க்கும் […]
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக கட்டாயமாக்குவதற்கு மாநில அரசு ஏப்ரல் 16 மற்றும் ஜூன் 17, 2025 அன்று அரசாணைகள் (GR) பிறப்பித்திருந்தது. இந்த முடிவு, மராத்தி மற்றும் ஆங்கில வழி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்தியை கட்டாயப் பாடமாக்குவதாக இருந்தது. ஆனால், இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சிகளான ஷிவசேனா (யு.பி.டி), மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (MNS), மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP-SP) உள்ளிட்டவை கடும் […]
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் கடந்த ஜூன் 25 அன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு வங்க அரசியலில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் மாஜிஸ்திரேட் முன் பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, ஆர்.ஜி.கார் […]
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி இன்று (ஜூன் 29, 2025) ஜெகந்நாதர் பக்தர்களிடம் மன்னிப்பு கேட்டார். இந்த சம்பவத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர். இன்று அதிகாலை குண்டிச்சா கோயில் அருகே ஜெகன்நாதர் தேர் வந்தபோது| ஏற்பட்ட இந்த நெரிசலில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நெரிசலுக்குப் பிறகு, ஒடிசா அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விவகாரம் […]
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற பெயரில் பதிவு செய்த ஒரு நபர் கழிவறையில் அமர்ந்தபடி விசாரணையில் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதி நிர்சர் எஸ். தேசாய் முன்பு நடந்த இந்த விசாரணை, காஸ் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஒரு நிமிட வீடியோவில், மஞ்சள் நிற சட்டை அணிந்த அந்த நபர், தனது மொபைல் ஃபோனை கழிவறை தரையில் வைத்து, புளூடூத் […]
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக எம்.பி. யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து முன்னாள் பாஜக எம்.பி. தருண் விஜய் உள்ளிட்ட பலரும் அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர். ஆனால், பாஜக தேசிய தலைமை இதுவரை அண்ணாமலையின் தேசிய பொதுச்செயலாளர் நியமனம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. எம்.பி. யதுவீர் கிருஷ்ணதத்த […]
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில் நின்று போனது. இதற்கு முக்கிய காரணமே, டீசலுக்கு பதிலாக தண்ணீர் கலந்த எரிபொருள் நிரப்பப்பட்டதால் ஏற்பட்ட பிரச்சனையால் தான். மொத்தம் 19 வாகனங்கள் நின்றது. இதில் மாநிலத்தின் முதலமைச்சரின் முதலமைச்சர் மோகன் யாதவின் காரும் அடங்கும். ரத்லம் பகுதியில் உள்ள ஒரு எரிபொருள் நிலையத்தில் டீசல் நிரப்பப்பட்ட பின்னர், வாகனங்கள் சில கிலோமீட்டர்கள் சென்றவுடன் ஸ்டாப் […]
டெல்லி : மத்திய விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் நீர் வீணாவதையும், தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் தடுக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்படுகிறது. மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டில் இது குறித்து கூறுகையில், “தண்ணீர் வீணாவதைத் தடுக்க புதிய திட்டத்தை கொண்டு வருகிறோம். இதன்மூலம் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான நீரைப் பெறுவார்கள். பயன்பாட்டுக்கு ஏற்றவாறு அவர்களுக்கு வரி விதிக்கப்படும்” என்றார். இந்தத் திட்டம் சோதனை முயற்சியாக பல்வேறு மாநில […]
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. அடுத்த சில நாட்களில் அதிக மழை, பலத்த காற்று மற்றும் திடீர் வெள்ள அபாயம் ஏற்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பல பகுதிகளில் கல்வி நிறுவனங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளன. அதன்படி, எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா, திருச்சூர், பாலக்காடு மற்றும் வயநாடு ஆகிய 7 மாவட்டங்களில் இன்று […]