பாகிஸ்தான் கிரிக்கெட் வீர‌ர்கள் மீது ஐசிசியிடம் பிசிசிஐ புகார்.!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொண்டதாக ஐசிசியிடம் பிசிசிஐ புகார் அளித்துள்ளது.

HarisRauf -SahibzadaFarhan

துபாய் :பாகிஸ்தான் வீரர்களான ஹாரிஸ் ரவுஃப் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோர் மீது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஒரு அதிகாரப்பூர்வ புகாரை பதிவு செய்துள்ளது. கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி துபாயில் நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தான் வீரர்களின் இரண்டு செயல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில், இரு பாகிஸ்தான் வீரர்களும் ஆட்டத்தின் போது தூண்டிவிடும் வகையிலும், கண்ணியமற்ற முறையிலும் நடந்துகொண்டதாக பிசிசிஐ தனது புகாரில் தெரிவித்துள்ளது.

இது குறித்து, போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிசிசிஐ கோரியுள்ளது. போட்டியின்போது வீரர்களுக்கு இடையே நடந்த வாக்குவாதங்கள் மற்றும் சைகைகள் இந்த புகாருக்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.

இதன் அடிப்படையில், பாகிஸ்தான் வீரர்களான ஹாரிஸ் ரவுஃப் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோர் மீது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஒரு அதிகாரப்பூர்வ புகாரை பதிவு செய்துள்ளது. ஒருவேளை, இந்த வீரர்கள் குற்றச்சாட்டுகளை மறுத்தால், ICC உயர்மட்ட நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் தலைமையில் விசாரணை நடைபெறலா

இதற்கான சரியான விளக்கம் அளிக்கப்படாவிட்டால், ICC நடத்தை விதிகளின்படி தண்டனைகள் விதிக்கப்படலாம். இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளில் எப்போதும் பதற்றங்கள் உச்சத்தில் இருப்பது வழக்கம். இந்த சம்பவங்கள், இரு நாடுகளுக்கும் இடையேயான அரசியல் பதற்றங்களைப் பிரதிபலிக்கின்றன, மேலும் ICC இந்த விவகாரங்களை எவ்வாறு கையாள்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.