SKY ஆடிய ருத்ரதாண்டவம்….பஞ்சாப் அணிக்கு மும்பை வைத்த டார்கெட்!
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 184 ரன்கள் குவித்துள்ளது.

ஜெய்ப்பூர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பிளே ஆப் சுற்றுகளை நெருங்கியுள்ளது. ஏற்கனவே, குஜராத், பெங்களூர், பஞ்சாப், மும்பை ஆகிய 4 அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டது. இருப்பினும் மீதமுள்ள போட்டிகளை அணிகள் விளையாடிக்கொண்டு இருக்கிறது. அந்த வகையில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் மும்பை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது.
போட்டியில் முதலில் டாஸ் வென்று பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்து மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி அதிரடியுடன் தடுமாறி விளையாடியது என்று சொல்லலாம். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரியான் ரிக்கல்டன் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவர் ஆட்டமிழந்த நிலையில் ரோஹித் சர்மா சிறிது நேரம் நிதானமாக விளையாடிக்கொண்டு இருந்தார். மற்றோரு முனையில் இருந்த சூர்யகுமார் யாதவ் நான் அதிரடி காண்பிக்கிறேன் என்பது போல அதிரடியாக விளையாடினார். அந்த சமயம் நல்ல பார்ட்னர்ஷிப் உருவான நிலையில் ரோஹித் சர்மா சிக்ஸர் அடிக்க முயன்று 24 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனால் மும்பை அணி கொஞ்சம் தடுமாற தொடங்கியது என்று சொல்லலாம். அடுத்ததாக களத்திற்கு வந்த திலக் வர்மா சூர்யகுமார் யாதவுடன் இணைந்து நிதானமாக விளையாடுவார் என பார்த்தால் அவரும் பெரிய ஷார்ட் ஒன்றை அடிக்கமுயன்று 1 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அவருக்கு அடுத்தபடியாக வந்த வில் ஜாக்ஸ் சிக்ஸர் பவுண்டரி என தெரிவிக்கவிட்டு அதிரடியில் இறங்கினார்.
அவருடைய அதிரடி நீடிக்கும் என எதிர்பார்த்த நிலையில் அவரும் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இருப்பினும் களத்தில் ஹர்திக் மற்றும் சூர்யா இருந்த காரணத்தால் மும்பை அணி ரசிகர்கள் நல்ல ஸ்கோர் வரும் என எதிர்பார்த்தனர். அதைப்போலவே, இருவரும் அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்தனர். அந்த சமயம், ஹர்திக்கும் ஆட்டமிழந்தார்.
இறுதியாக மும்பை அணியின் அதிரடி ஆட்டம் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்துள்ளது. மும்பை 184 ரன்கள் எடுத்துள்ள நிலையில், அடுத்ததாக 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கவுள்ளது. மேலும், பஞ்சாப் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங், மார்கோ ஜான்சன் ஆகியோர் 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.