கூட்டணி குறித்து மாறி மாறி பேசி வரும் தேமுதிக தற்போது நட்டாற்றில் விடப்பட்டுள்ளதாக தெரிகிறது
நாடளுமன்ற தேர்தளுக்கான அதிமுக கூட்டணியில் தேமுதிக தற்போது ஆறாவது முறையாக பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் ஒரு முடிவு எட்டப்படவில்லை
நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. திமுக ஒரு முனையிலும் அதிமுக, பாஜக, பாமக ஒரு முனையிலும் போட்டியிட உள்ளன. இந்நிலையில் ஓரளவிற்கு பெயர் பெற்ற கட்சியான விஜயகாந்தின் தேமுதிக எந்த அணியில் சேரப் போகிறது என்பது பெரும் விவாதப் பொருளாக இருந்தது.
தற்போது திமுகவும் இல்லாமல் அதிமுகவும் இல்லாமல் தனித்து நிற்க வேண்டிய நிற்கதிக்கு ஆளாகியுள்ளது. இந்நிலையில் தேமுதிகவின் அதிமுக கூட்டணிக்கு 6வது கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் துணை செயலாளர் சுதீஷ் கொடுத்த பேட்டியில் அவர் கூறியதாவது…
அதிமுகவுடன் தொடர்ந்து கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இன்று ஆறாவது கட்ட பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. எங்களுக்கு கௌரவமான தொகுதிகள் கொடுக்கப்படவில்லை. இதன் காரணமாக இன்றைய பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது. நாளை மீண்டும் பேச்சுவார்த்தை துவங்குவோம் என்று கூறியுள்ளார் அவர்.