காரைக்குடி : சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அந்த வகையில், இன்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர் " வாக்குக்கு பணம் கொடுப்பதன் மூலம் ஜனநாயகம் செத்துவிட்டது. நேர்மையாக ஆட்சி செய்ய விரும்புபவர், நாட்டு மக்களும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்.காசு, பணம், கார் இதைத் தன் பிள்ளைகளுக்கு வைத்துவிட்டு போகணும்னு நினைக்கிறாங்க. உங்க பிள்ளையை நாங்க அந்தப் பிள்ளைகளுக்கு சுவாசிக்க நல்ல காற்றை வைத்துவிட்டு போகணும்னு துடிக்கிறோம்.
இவங்க தங்கத்தைப் பிள்ளைகளுக்கு வைத்துவிட்டு போகணும்னு நினைக்கிறாங்க. நான் என் பிள்ளைகளுக்குக் குடிக்க நல்ல தண்ணியை வைத்துவிட்டு போகணும்னு தவிக்கிறேன்.இவங்க சொத்தை சேர்த்து வைத்துவிட்டு போகணும்னு நினைக்கிறாங்க.
நான் விஷமில்லாத, நஞ்சில்லாத சோற்றை என் பிள்ளைகளுக்கு வைத்துவிட்டு போகணும்னு நினைக்கிறேன். உங்களுக்குப் புரியுதுன்னு நினைக்கிறேன்.இவங்க வாக்குக்குக் காசு கொடுத்து வாக்கை பறிக்க நினைக்கிறாங்க. எனக்குக் காசு இல்லை. இருந்தாலும் நான் தரமாட்டேன். ஏனென்றால் என் கொள்கை முடிவு – உனக்குச் சேவை செய்ய நான் ஏன் காசு தரணும்? உனக்குச் சேவை செய்வேன். நீ தேர்வு செய்தீன்னா.வாக்குக்கு காசு கொடுத்தா பணத்துக்கு வாக்கு – என் இனத்துக்குத் தூக்கு, அதன் மானத்துக்குத் தூக்கு. நோட்டுக்கு ஓட்டு – நாட்டுக்கு வேட்டு. அப்போ நான் மான்மிக் ஜனநாயகத்தைக் காப்பாற்ற நினைக்கிறேன்.
கேடுகெட்ட பணநாயகத்தைக் கையில் எடுக்கமாட்டேன்.காசு கொடுக்கிற கட்சி மூணு கட்சி. இலவசம். அது ஏமாற்று. வளர்ச்சி இல்ல. வீழ்ச்சி, கவர்ச்சி. அதை மூணு கட்சியும் சொல்லுது. வந்தா இரண்டாயிரம், இரண்டாயிரம், இரண்டாயிரத்தி நூறு, எட்டாயிரம் டோக்கன், பத்தாயிரம் டோக்கன்.No tokens. Only ஓட்டல்ல சாப்பிடப்போகும்போது token. ஓட்டுக்கு no token. புரியுதா?ஓட்டல்ல சாப்பிடப்போனா token வாங்கிட்டு போகச் சொல்லுவான். நீங்க ஓட்டு போட்டுட்டு வர்றதுக்கு token குடுக்கிறாங்க. பரம்பரை சொத்து. சேர, சோழ, பாண்டியன் வம்சாவளி. அவன் எல்லாம் வித்துவிட்டு நமக்குக் குடுக்கிறாங்க. எட்டாயிரம் ரூபாய் token. எந்தக் கடையில வேணாலும் குடுத்து எத வேணாலும் வாங்கிக்கலாம்.
Token வாங்கிட்டு வா. அந்தக் கடையில குடுத்து அந்தக் கடையை எங்களுக்கு எழுதி வைங்கன்னு கேப்போம். எவனாவது குடுக்குறானான்னு பார்ப்போம். நாங்க token வாங்கிட்டு போய் ஐயா கிட்ட கொடுத்து ‘இந்த டோக்கனை வச்சிக்கிட்டு இந்த முதலமைச்சர் பதவியை கொடுங்க’ன்னு கேட்கப் போறேன்.
இந்த வெயில்ல கூட நம்மளால சிரிக்க முடியும் பாத்தியாடா. நம்ம நிலைமை இப்படி ஆயிடுச்சு. எது? எப்படி வாழ்க்கை வறண்டு போச்சே. மக்களின் வாழ்க்கை காஞ்சு போச்சே. தொண்டை வறண்டு போச்சேன்னு. என் நெலம் வறண்டு போச்சே. மக்களின் வாழ்க்கை இருண்டு போச்சே.தொண்டை வறண்டா என்னய்யா? போயா என்னைய மருத்துவர் சொன்னாரு. ரெண்டு மாசம் பேசக் கூடாது நீ என்று சொன்னாருநான் பேசல. நீங்க போய்ப் பேசிட்டு வாங்க. இந்த மாதிரி பேசக் கூடாது. புரியுதா? ரெண்டு மாசம் பேசக் கூடாது. வேற ஏதாவது மருந்து இருந்தா சொல்லுங்கன்னு. ஒன்னும் கிடையாது" என சொல்லிட்டாரு எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.
