விஜய்யும், எடப்பாடியும் ஒரே மாதிரி வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் – ஆர்.எஸ்.பாரதி தாக்கு!

கார்கள் மாறி மாறி சென்று சாமி படத்தின் பெருமாள் பிச்சையையே மிஞ்சி விட்டார் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் செய்துள்ளார்.

edappadi palanisamy

சென்னை : கடந்த 24ம் தேதி வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்று கொண்டனர். இதில், மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகவும் வெடித்திருக்கிறது.

ஏனென்றால், அரசியல் தலைவர்கள் பலரும் முதல்வர் சென்றது பற்றி விமர்சனம் செய்து பேசி வருகிறார்கள். குறிப்பாக த.வெ.க தலைவர் விஜய் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசாமி ஆகியோர் விமர்சனம் செய்து பேசியிருந்தார்கள். அவர்களுக்கு திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில், திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது ” ஒரே மாதிரியான நாக்பூர் ஸ்கிரிப்டை வைத்து விஜய்யும் பழனிசாமியும் மாறி மாறி நாக்கு வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்! கார்கள் மாறி மாறிப் சென்று சாமி படத்தின் பெருமாள் பிச்சையையே மிஞ்சி விட்டார் பழனிசாமி.  எதிர்க் கட்சித் தலைவராகச் செயல்பட எத்தனையோ ’ஸ்கோப்’ இருக்க, ’பயோஸ்கோப்’ காட்டிக் கொண்டிருக்கிறார் ’சூனாபானா’ எடப்பாடி பழனிசாமி!

நிதி ஆயோக் கூட்டத்தை வைத்து எதிர்க் கட்சித் தலைவர் செய்யும் சேஷ்டைகள் சினிமாவில் கூட கண்டிராத நகைச்சுவை காட்சிகள். அதனைத் தமிழ்நாடு அரசு மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களும் ரசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்! நிதி ஆயோக் கூட்டத்தை வைத்து அதிகம் ஸ்கோர் செய்வது யார்? என எதிர்க்கட்சிகளுடன் போட்டா போட்டி நடக்கிறது. ஒரே மாதிரியான நாக்பூர் ஸ்கிரிப்டை வைத்து விஜய்யும் பழனிசாமியும் மாறி மாறி நாக்கு வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரே மாதிரியான அறிக்கையைக் காப்பி பேஸ்ட் செய்து கொண்டிருக்கிறார்கள். பாஜகவுக்குத்தான் தமிழ்நாட்டின் எத்தனை கிளைக் கழகங்கள்? எதற்கும் வருத்தப்படாத இந்த வாலிபர்களை(?) பார்க்கும்போது, ’’ஏய் அங்குட்டு போய் விளையாடுங்கப்பா’’ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. அதிலும் பழனிசாமியின் காமெடி கதறல்கள் காதுகளைக் குளிர வைக்கின்றன.

’பாஜகவுடன் கூட்டணி வைத்தால்தான் தோற்றோம்’ என்று நிர்வாகிகள் அலறித் துடித்த போதும் கூட அவர்களது கருத்துக்களை மதிக்காமல் பாஜகவுடன் கூட்டணி வைத்தது தன் உறவினர்களை காப்பாற்றத்தானே! தவழப்பாடியாரின் சட்டை கிழிந்தாலும், முன்னால் மேக்கப் கலையாமல் ’ஒய்யால என்ன மாதிரி கூவுறான்’ என்பது போல பழனிசாமியின் கண்ணீர் நன்றாகப் புரிகிறது.

தன்னுடைய மகன் மிதுனும் தன் உறவினர்களும் தப்பிக்கக் கட்சியைப் பலிபீடத்திற்குக் கொண்டு வந்த புண்ணியவான் தான் பழனிசாமி. அதிமுகவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்! நிதி ஆயோக் கூட்டத்திற்குச் செல்கிறேன் எனச் சொல்லிவிட்டுச் சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உங்களைப் போலக் கட்சி அலுவலகத்தைப் பார்க்கப் போகிறேன் எனச் சொல்லிவிட்டு அமித்ஷா வீட்டுக்குப் போனவர் அல்ல எங்கள் முதல்வர்” எனவும் அறிக்கையில் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்