ட்ரை சைக்கிளில் சென்று உணவு வழங்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை ராயபுரம் பகுதியில் மீன்பாடி வண்டியில் வந்து உணவு வழங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை :மாவட்டத்தில்  பெய்த கனமழை காரணமாகப் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. இதன் பல பகுதிகளில் காரணமாக, தெருக்களிலும், வீடுகளிலும் தண்ணீர் தேங்கிச் சமைத்துச் சாப்பிட முடியாத அளவுக்கு மக்களின் இயல்பு வாழ்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

உடனடியாக, தமிழக அரசு தேங்கி இருக்கும் தண்ணீரை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு பல இடங்களில் தேங்கி இருந்த நீரை அகற்றவும் செய்தது. மற்றொரு பக்கம் அரசியல் தலைவர்கள் பலரும் களத்தில் இறங்கி தண்ணீர் அதிகமாகத் தேங்கி இருக்கும் இடங்களைப் பார்வையிட்டு அப்பகுதியில் இருக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மழை நீர் தேக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த சென்னை ராயபுரம் பகுதிக்கு நேரடியாகச் சென்று அங்கிருந்த மக்களைச் சந்தித்து அவர்களுடைய நலம் விசாரித்தார்.

அத்துடன், அங்கிருந்த மக்கள் அனைவருக்கும் ட்ரை சைக்கிளை ஒட்டிக்கொண்டு உணவுகளையும் வழங்கினார். தேங்கியிருந்த தண்ணீருக்கு நடுவே ட்ரை சைக்கிள் ஒட்டிக்கொண்டு அவர் சாப்பாடு வழங்கியதைப் பார்த்த பாட்டி ஒருவர் அவருடைய கைகளைப் பிடித்து நன்றியையும் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ட்ரை சைக்கிளில் சென்று உணவு வழங்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!