"அரசியலில் நிரந்தர நண்பர்களும், எதிரிகளும் இல்லை"- நயினார் நாகேந்திரன்.!

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்தார்.

Nainar Nagendran - edappadi palanisamy

சேலம் :ஓமலூரில் பாஜக சார்பில் நமோ யுவா மோதி மினி மாரத்தான் போட்டியை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார். பின்னர்,எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார். கடந்த வாரம் டெல்லி சென்று அமித்ஷாவை இபிஎஸ் சந்தித்த நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இதில், பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், KP ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அக்.1 முதல் நயினார் தனது பரப்புரையை தொடங்கவுள்ள நிலையில், அதற்கு அழைப்பு விடுக்கவே இந்த சந்திப்பு என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து செய்தியாளர் சந்தித்து பேசிய நயினார் நாகேந்திரன், ”அக்டோபர் 11முதல் மதுரையில் இருந்து தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறேன். எடப்பாடி பழனிசாமியை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன்.இபிஎஸ் – அமித்ஷா சந்திப்பு குறித்து பேசவில்லை. அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை” என்று கூறியுள்ளார்.