சென்னை :சென்னை மாநகரில் நேற்றைய தினம் முதல் இன்று விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக நகரின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேக வெடிப்பு காரணமாக வட சென்னையில் நீர்வீழ்ச்சி போல் மழை கொட்டியதாக மக்கள் தெரிவித்தனர்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேக வெடிப்பு (Cloudburst) காரணமாக, சென்னையில் ஒரு மணி நேரத்தில் 100 மி.மீ-க்கு மேல் மழை பதிவாகியது. இது 2025 ஆகஸ்ட் மாதத்தில் மூன்றாவது முறையாக 100 மி.மீ-க்கு மேல் மழை பெய்த நிகழ்வாகும். மணலியில் 27 செ.மீ மழை பதிவாகியதாகவும், எழும்பூர், அண்ணா நகர், அம்பத்தூர், திருவொற்றியூர், ராயபுரம், கிண்டி, விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டியதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மயிலாப்பூர், மந்தைவெளி, தரமணி, பெரம்பூர், ஓட்டேரி, வேளச்சேரி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. திருவொற்றியூர் மாணிக்கம் நகர் ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதைக்கு திருப்பி விடப்பட்டனர்.
சென்னை வானிலை ஆய்வு மையம், மழை அடுத்த இரு நாட்களுக்கு தொடர வாய்ப்புள்ளதாகவும், இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்றிரவு பெய்த கனமழை குறித்து தொலைபேசி மூலம் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலி
ஒரு வார கால வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பணியாற்றிட முதலமைச்சர் அறிவுறுத்தியதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளனர்.
