அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் யாரும் மீண்டும் திரும்பி வர மாட்டார்கள் என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் (செப்டம்பர் 25 ஆம் தேதி)சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார் 3வது நீதிபதி சத்யநாராயணன்.மேலும் அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி சத்தியநாராயணன்.
unknown nodeசெப்டம்பர் 26 ஆம் தேதி 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க விவகாரத்தில் தமிழக சபாநாயகர் சார்பில் வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தார்.
இது ஒருபுறம் சென்றுகொண்டிருக்க தற்போது முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.அந்த அறிக்கையில், அதிமுகவில் இருந்து பிரிந்து தினகரன் அணிக்கு சென்றவர்கள் கட்சியில் மீண்டும் இணைய வேண்டும்.தவறான வழிநடத்தல்கள், மனக்கசப்புகள் காரணமாக பிரிந்து சென்றவர்கள் அதிமுகவிற்கு திரும்பி வரவேண்டும்.கருத்து வேறுபாடுகளையும் மனமாச்சரியங்களையும் புறம்தள்ளிவிட்டு ஒன்றுபட வேண்டும். நீர் அடித்து நீர் விலகுவது இல்லை என்ற பழமொழியை அறிக்கையில் கூறினார்கள்.
unknown nodeஇந்நிலையில் அவர்களின் அழைப்புக்கு டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார் .அவர் கூறுகையில், அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் யாரும் மீண்டும் திரும்பி வர மாட்டார்கள். தற்போது அழைப்பதற்கான காரணத்தை விளக்க வேண்டும் என்றும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.