சென்னை :தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்தித்து பேசுகையில், ‘முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக இன்னும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படவில்லை’ என்று கேள்வி எழுப்பினார். குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவார்.
பின்னர், செங்கோட்டையனை இயக்குவது அண்ணாமலையா? என்ற கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ‘அதிமுக கட்சியில் ஏற்பட்ட பிளவிற்கு பின்னணியில் இருப்பது திமுக தான். செங்கோட்டையன் எங்கே சென்றிருக்கிறார் என எனக்கு தெரியாது. நாளை மறுநாள் நான் டெல்லிக்கு செல்ல உள்ளேன்.
போராடுபவர்களையும், கேள்வி கேட்போரையும் நசுக்கும் அரசாக திமுக அரசு இருக்கிறது. தூய்மைப் பணியாளர்களை நிரந்தரமாக்குவோம் எனத் தேர்தல் அறிக்கையில் திமுக கூறியதைத்தான் கேட்டனர். திமுகவின் தூண்டுதலில்தான் அனைத்து பிரச்னைகளும் இங்கு நடக்கின்றன” என்று கூறியுள்ளார்.
