சென்னை :சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்றைய தினம் (25.9.2025) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்ற கருப்பொருளில் மாபெரும் கல்வி எழுச்சி விழா நடைபெற்றது. இந்த விழா, தமிழ்நாட்டின் கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்களையும், மாணவர்களின் சாதனைகளையும் கொண்டாடும் வகையில் நடத்தப்பட்டது.
முதலமைச்சர் தனது உரையில், கல்வியின் முக்கியத்துவத்தையும், தமிழ்நாடு அரசின் கல்வி மேம்பாட்டு திட்டங்களையும் எடுத்துரைத்தார். மேலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சிறப்பு சாதனைகளை பாராட்டி, விருதுகளும் வழங்கப்பட்டன. இவ்விழாவில் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கல்வி தொடர்பான திட்டங்களை தொடங்கி வைத்தார்.
தற்போது, இந்த விழா குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில், ”கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், “நமது அரசின் ஒவ்வொரு திட்டமும் எத்தனை பேரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது என நேரில் கண்டு மலைத்துப் போனேன்.
கலை, விளையாட்டு எனப் பல துறையிலும் பல சாதனையாளர்களை வாழ்த்தி, வழிகாட்டிய இந்த நிகழ்ச்சி, ‘மேல ஏறி வாறோம்’ எனத் தமிழ்நாட்டின் வெற்றியை அனைவருக்கும் பறைசாற்றியிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown node