“நாகை மருத்துவமனையை விஜய் பார்க்கட்டும்” – அமைச்சர் சுப்பிரமணியன்.!

நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க மருத்துவர்களே இல்லையாம் என்ற விஜய்யின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.

TVK -Vijay‌

நாகப்பட்டினம் :தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாகப்பட்டினத்தில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தில், நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு மருத்துவர்கள் இல்லாதது உள்ளிட்ட உள்ளூர் பிரச்சனைகளை விமர்சித்தார்.

இது தொடர்பாக பேசிய தவெக தலைவர் விஜய், ”வேளாங்கண்ணி, நாகூர், கோடியக்கரை போன்ற சுற்றுலாத் தளங்களை மேம்படுத்தினால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள்? நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க மருத்துவர்களே இல்லையாம்.

நாகை புதிய பேருந்து நிலையம் சுத்தமாக இல்லை, ரயில் நிலையத்தில் வேலைகள் தாமதமாக நடக்கின்றன” என்று குற்றச்சாட்டினார். இதற்கு பதிலளிக்கும் வகையில், “தவெக தலைவர் விஜயின் பேச்சு, யாரோ எழுதிக் கொடுத்து படிப்பதுபோல் உள்ளது. நாகை மருத்துவமனைக்கு சென்று விஜயை பார்க்கச் சொல்லுங்கள்” என்று பதில் அளித்துள்ளார்.