தமிழ்நாடு

எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் , போடியில் துணை முதலமைச்சர் போட்டி

எடப்பாடி தொகுதிக்கு முதல்வரும், போடிநாயக்கனூர் தொகுதிக்கு துணை முதல்வரும் இன்றே விருப்ப மனு அளிக்க உள்ளனர். தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.அதிமுகவில் விருப்பமனு விநியோகம் இன்று முதல் தொடங்குகிறது.தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், இன்று முதல் மார்ச் 5-ம் தேதி வரை விருப்பமனு பெற்று  பூர்த்தி செய்யலாம் என்றும், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்பமனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் […]

TNAssemblyElection2021 3 Min Read
Default Image

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலைக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை…!

சென்னை ராயப்பேட்டையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலைக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் 73-வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது அதிமுக பிரபலங்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள், செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய நிலையில், சென்னை ராயப்பேட்டையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலைக்கு […]

#ADMK 2 Min Read
Default Image

தனது இல்லத்தில் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முதல்வர்…!

தனது இல்லத்தில், ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முதல்வர். மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் 73-வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதிமுக பிரபலங்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள், செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.  இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி  அவர்கள் தனது இல்லத்தில், ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

#EPS 2 Min Read
Default Image

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டின் அருகே விபத்து…!

முதல்வரின் வீட்டின் அருகே, இரண்டு வாகனங்கள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் வீடு, சென்னை பசுமை வழிச்சாலை அருகே அமைந்துள்ளது. இந்நிலையில், முதல்வரின் வீட்டின் அருகே, இரண்டு வாகனங்கள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்திற்கு காரணமானவர்கள் குடி போதையில் வாகனத்தை ஒட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, போதையில் வாகனத்தை ஒட்டிய ஜோ என்ற வெளிநாட்டை சேர்ந்த நபரை […]

#Accident 2 Min Read
Default Image

இன்று முதல் அதிமுக-வில் விருப்பமனு விநியோகம் தொடக்கம்…!

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், இன்று முதல் மார்ச் 5-ம் தேதி வரை விருப்பமனு பெற்று  பூர்த்தி செய்யலாம். தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அனைத்து கட்சிகளும் மும்முரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிற நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுகவில் விருப்பமனு விநியோகம் இன்று முதல் தொடங்குகிறது. தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற தேர்தலில் […]

#ADMK 3 Min Read
Default Image

எட்டரைகோடி மக்களின் ஏந்தல் புரட்சித்தலைவி அம்மாவை வணங்குகிறேன்! – ஓபிஎஸ்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு  தனது ட்வீட்டர் பக்கத்தில் அவரை வாழ்த்தி ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் 73-வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதிமுக பிரபலங்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள், செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடவுள்ளார்கள். இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு  தனது ட்வீட்டர் பக்கத்தில் அவரை வாழ்த்தி ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், […]

#OPS 3 Min Read
Default Image

திமுக-வின் முக்கிய பிரபலம் மருத்துவமனையில் அனுமதி…!

திமுகவின் முன்னாள் அமைச்சரான பொன்முடி அவர்கள், சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுகவின் முன்னாள் அமைச்சரான பொன்முடி அவர்கள், சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பித்தப்பையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து, மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிற நிலையில், அவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘பித்தப்பை பிரச்சினை காரணமாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், பின் சரியாகிவிடும்’ […]

#DMK 2 Min Read
Default Image

நான் தமிழக முதல்வரானாலும் உங்களில் ஒருவன் தான் – மு.க.ஸ்டாலின்

நான் முதல்வரானாலும் எப்போதும் உங்களில் ஒருவனாக தான் இருப்பேன். சென்னை, குளத்தூரில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், வரவேற்புரை வழங்கிய பெண், நாளைய முதலமைச்சர் முன் உரையாற்றுவது சற்று பதற்றமாக தான் உள்ளது என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின் அவர்கள், அப்பெண்ணுக்கு பதிலளிலளிக்கும் விதமாக, ‘வரவேற்று பேசிய சகோதரி அவர்கள், ஒரே டென்ஷனா இருக்குறேன், நாளைய முதலமைச்சர் முன் […]

#DMK 2 Min Read
Default Image

குறுக்கு வழியில் பாஜக ஆட்சி அமைக்காது..! புதுச்சேரி பாஜக தலைவர் உறுதி…!

பாஜக ஒருபோதும் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயலாது என பாஜக தலைவர் சாமிநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்தது. சட்ட பேரவையில் முதல்வர் நாராயணசாமி கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வியடைந்ததாகவும் சபாநாயகர் தெரிவித்த நிலையில், முதல்வர் நாராயணசாமி தன் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், பாஜக ஒருபோதும் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க […]

#BJP 2 Min Read
Default Image

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள்…!

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் 73-வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் 73-வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் , மலர்தூவி மரியாதை செலுத்தவுள்ளனர். மேலும், அதிமுக பிரபலங்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள், செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடவுள்ளார்கள். இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாள் முன்னிட்டு, இன்று  அதிமுகவில் விருப்பமனு விநியோகிக்கப்படுகிறது. ஈபிஎஸ்-ஓபிஎஸ் வேண்டுகோளின் படி அதிமுகவினர் இன்று மாலை 6 […]

#ADMK 2 Min Read
Default Image

திமுக ஆட்சியில் கொடுத்த டிவி நல்ல நிலையில் இருந்தால் 1 லட்சம் பரிசு – அமைச்சர் ஜெயக்குமார்

திமுக ஆட்சியில் கொடுத்த டிவி தற்போது நல்ல நிலையில் இருந்தால் 1 லட்சம் பரிசு தருகிறேன் அமைச்சர் ஜெயக்குமார் சவால். சென்னையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவரது முடிவில் உறுதியாக இருந்தால், கடைசி வரை சட்டமன்றத்துக்கு வர முடியாது என்று தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என குறிப்பிட்டுள்ளார். பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க மத்திய அரசு […]

#AIADMK 3 Min Read
Default Image

பாஜக ஜனநாயகத்தை புதைத்து வருகிறது – வேல்முருகன்

தனக்கு இருக்கிற அதிகாரத்தை பயன்படுத்தி, ஆட்சி கவிழ்ப்புகளில் ஈடுபட்டு, ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் வேலையை தான் செய்து வருகிறார்கள். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்கள் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளர். அப்போது பேசிய அவர்,  பாரதிய ஜனதா பொறுப்பேற்ற பின், குறுக்கு வழியில், சட்டத்திற்கு புறம்பாக பணம், பதவிகளை கொடுத்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சிகளை கவிழ்த்து வருகிறது. தனக்கு இருக்கிற அதிகாரத்தை பயன்படுத்தி, ஆட்சி கவிழ்ப்புகளில் ஈடுபட்டு, ஜனநாயகத்தை குழி தோண்டி […]

#BJP 2 Min Read
Default Image

திமுக கொடுத்த தொலைக்காட்சி எந்த வீட்டிலாவது நல்ல நிலையில் இருந்தால் ரூ.1 லட்சம் தருகிறேன் – அமைச்சர் ஜெயக்குமார்

திமுக ஆட்சியில் மக்களுக்கு கொடுக்கப்பட்ட தொலைகாட்சி எந்த வீட்டிலாவது தற்போது நல்ல நிலையில் இருந்தால் ரூ.1 லட்சம் தருகிறேன். அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள், சென்னையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, பெட்ரோல்-டீசல் விலையை குறைப்பது மத்திய அரசின் கடமை. எனவே பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க மத்திய அரசிற்கு, தமிழக அரசு தெடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், அதிமுக கொடுத்த […]

#ADMK 2 Min Read
Default Image

மதுரை எய்ம்ஸின் நிர்வாக இயக்குனராக ஹனுமந்த ராவ் நியமனம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். ரூ.1,264 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பின்பு,மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2019-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். அண்மையில் மதுரையில் அமையவுள்ள ‘எய்ம்ஸ்‘ திட்ட மதிப்பீடு ரூ.2,000 கோடியாக உயர்ந்திருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்தது. இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

AIIMS 2 Min Read
Default Image

2013-ஐ ஒப்பிடும் போது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை குறைவாக தான் உள்ளது – எல்.முருகன்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை  பொறுத்தவரையில், 2013, 2014-ஐ விட குறைவாக தான் உள்ளது. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், வரும் 25-ம் தேதி பிரதமர் மோடி கலந்து கொள்ளும்  பிரமாண்டமான பொது கோவையில் நடைபெற உள்ளது. ராகுல் காந்தி செல்லும் இடமெல்லாம் காங்கிரஸ் தோல்வி அடைவதாகவும், தற்போது அவர் தமிழகம் வர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான […]

#LMurugan 3 Min Read
Default Image

ஒய்யார கொண்டையிலே தாழம்பூவாம்…! அதன் உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்…! -தயாநிதிமாறன்

அதிமுக  பட்ஜெட்டில் வெறும் அறிவிப்புகள் இருக்குமே தவிர, அந்த அறிவிப்புகளை நிறைவேற்ற அவர்கள் இருக்க மாட்டார்கள். தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்றன் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று சென்னை வாலாஜாசாலை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டப்பேரவையில், தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 11-வது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து அரசியல் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிற நிலையில், திமுக எம்.பி தயாநிதிமாறன் அவர்கள் சென்னை […]

dhayanithimaran 4 Min Read
Default Image

#Breaking: பிப். 25 முதல் போக்குவரத்துக்கு ஊழியர்கள் ஸ்ட்ரைக்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25-ஆம் தேதி முதல் போக்குவரத்துக்கு கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். ஓய்வூதியப் பலன், ஊதிய உயர்வு, தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர பணி, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழக அரசை போக்குவரத்து சங்கத்தினர், தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக கடந்த மாதம் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சில அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடு எட்டவில்லை. இந்நிலையில், தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி […]

#Strike 2 Min Read
Default Image

அரசு பணியாளர்கள், ஓய்வூதியம் பெறுவோருக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு தெரியுமா?

அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.1,02,049 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வரவுள்ளதால், இன்று சென்னை வாலாஜாசாலை, கலைவாணர் அரங்கில் கூடும் சட்டப்பேரவையில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 11-வது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார். இந்தநிலையில், இந்தநிலையில், அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு […]

#TNGovt 3 Min Read
Default Image

டாஸ்மார்க் மூலம் 30 ஆயிரம் கோடி வருவாய் – நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தகவல்

தேர்தலுக்கு பின் எந்த அரசு வந்தாலும் நிதி நிலையை சரி செய்ய குறைந்தது 3 ஆண்டுகள் தேவைப்படும் என்று தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.   தமிழக சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இதன் பின்னர் தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தேர்தலுக்கு பின் எந்த அரசு வந்தாலும் நிதி நிலையை சரி செய்ய குறைந்தது 3 ஆண்டுகள் தேவைப்படும்.கடன் வாங்குவதில் ஜிடிபி மற்றும் 15ஆவது நிதிக்குழு அளித்த […]

#TNGovt 3 Min Read
Default Image

ரூ.1.70 லட்சம் கோடி கடன் அதிகமாகியிருப்பது பெரும் கவலை அளிக்கிறது-டிடிவி தினகரன் ..!

ஒரே ஆண்டில் ரூ.4 லட்சம் கோடியில் இருந்து ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருப்பது பெரும் கவலை அளிக்கிறது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் கடன் சுமை தற்போது ரூ.4.85 லட்சம் கோடியாக உள்ள நிலையில், அடுத்த ஓராண்டில் ரூ.5.7 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் கடன் தொகை ஒரே ஆண்டில் ரூ.4 லட்சம் கோடியில் இருந்து […]

#TTVDhinakaran 7 Min Read
Default Image