திருப்பூர் :உடுமலை அருகே காவல் உதவி ஆய்வாளர் (S.I.) சண்முகவேல் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மணிகண்டன் என்பவர், இன்று அதிகாலையே காவல்துறையுடனான என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஏற்கனவே, இந்த கொலை வழக்கில் தந்தை – மகன் நேற்று சரணடைந்த நிலையில், எஞ்சியிருந்த மணிகண்டனை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், மணிகண்டன் சிக்கனூர் அருகே ஒப்பாறு ஓடையில் பதுங்கி இருந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, தகவலறிந்து விரைந்த காவலதுறையினர் இன்று அதிகாலையில் அவரை கைது செய்ய முயன்றன. மணிகண்டனை கைது செய்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றபோது, மணிகண்டன் அரிவாளால் தாக்க முயன்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, காவல்துறை நடத்திய தற்காப்பிற்காக காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மணிகண்டன் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் உதவி ஆய்வாளர் சரவணனுக்கு கையில் காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள்தெரிவிக்கின்றன.
