த.வெ.க சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள்! என்னென்ன ?

2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கி த.வெ.க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

TVKGeneralBodyMeeting

செங்கல்பட்டு :மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று (நவம்பர் 5, 2025) தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அழைப்புக் கடிதம் மற்றும் அடையாள அட்டையுடன் வந்த நிர்வாகிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. சட்டமன்றத் தேர்தல் பணிகள், பூத் கமிட்டி வேலை, தொண்டர் அணி இயக்கம், கட்சி விரிவாக்கம் ஆகியவற்றைப் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.

அது மட்டுமின்றி, கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, இதில் கரூர் நெரிசல் சம்பவம், பெண்கள் பாதுகாப்பு, மீனவர்கள் கைது, வாக்காளர் SIR திருத்தம் போன்றவை உள்ளன. கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

கரூரில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல்

பெண்கள் பாதுகாப்பு தீர்மானம்

தமிழகம், புதுவை சேர்ந்த 35 மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் மற்றும் அவர்களின் விடுதலைக்கு அறிவுறுத்தல்

வாக்குரிமை பறிக்கும் S.I.R-க்கு கண்டனம்

டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாதிப்புக்கு காரணமான தமிழக அரசுக்கு கண்டனம்

வடகிழக்கு பருவமழைக்கு போதிய ஏற்பாடுகளை அரசு செய்து முடிக்க வேண்டும்

ராம் சார் சதுப்புநிலத்தில் கட்டுமான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்

தலைவரின் மக்கள் சந்திப்புக்கு வரும் மக்களுக்கு உரிய பாதுகாப்பை இந்த அரசு வழங்க வேண்டும்

கழகத்தின் மேலும் கழகத் தோழர்களின் மீது காழ்ப்புணர்ச்சியுடன் அவதூறு பரப்பும் அரசின் கைக்கூலிகளுக்கு கண்டனம்

தமிழக தொழில்துறைக்கு வந்த முதலீடுகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

ஜனநாயகத்துக்கு எதிராக கருத்துரிமையையும் பேச்சுரிமையையும் சிதைக்கும் வகையில் கைது நடவடிக்கை எடுக்கும் திமுக அரசுக்கு கண்டனம்

கூட்டணி நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. மக்கள் விரும்பும் முதல்வர்  விஜயின் தலைமையிலேயே போட்டி எனவும் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

கூட்டத்தில் விஜய், கரூர் சம்பவத்தைப் பற்றி பேசி, “இந்த சோகத்தில் அனைவரும் பங்கு வகித்துள்ளோம். கூட்ட நிர்வாகம் மேம்பட வேண்டும்” என்று கூறினார். சிபிஐ விசாரணையில் ஒத்துழைப்பு அளிப்பதாகவும் தெரிவித்தார். தேர்தல் பணிகளுக்கு பூத் கமிட்டிகளை வலுப்படுத்தவும், தொண்டர் அணி அமைக்கவும் உத்தரவிட்டார். கூட்டம், கட்சியின் 2026 தேர்தல் உத்திகளை தீர்மானிக்கும் முக்கியமானதாக அமைந்தது. முடிவாக, தவெக பொதுக்குழு கூட்டம், கரூர் சம்பவத்திற்குப் பிறகு கட்சியின் முதல் முக்கிய நிகழ்வாக அமைந்தது.

unknown node