சமீபத்தில் உத்தரபிரதேசத்தின் படான் என்ற இடத்தில் 50 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரப்பிரேதேச மாநிலம் படான் மாவட்டத்தில் உகைதி பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்ற 50 வயது பெண், பூசாரி உள்ளிட்ட இருவரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அப்பகுதி அங்கன்வாடி தொழிலாளியாக அந்த பெண் பணிபுரிந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான விசாரணையில், ஒரு கும்பல் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என்றும் பெண்ணுறுப்பு […]
பி.எம்.சி வங்கி மோசடி வழக்கில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷாவை மீண்டும் ஜனவரி 11-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. பி.எம்.சி வங்கி மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.இந்த வழக்கில் ரூ.95 கோடி கடன் பெற்றதாக பிரவீன் ராவத் என்பவர் கைது செய்யப்பட்டார்.மேலும் இந்த வழக்கின் விசாரணையில் , பிரவீன் ராவத் தனது மனைவியின் வங்கி கணக்கில் ரூ.1 கோடியே 60 லட்சம் செலுத்தியதும் […]
முன்னாள் ஹாக்கி வீரர் பிரவீன் ராவின் வீட்டிற்குள் நுழைந்த கடத்தல்காரர்கள் அவரின் குடும்பத்தினரை மிரட்டி காரில் பிரவீன் ராவ், சுனில் ராவ் மற்றும் நவீன் ராவ் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் காவல்துறையினர் கார்களைக் கண்டுபிடித்தனர். கடத்தல்காரர்கள் கடத்திய மூன்று பேரையும் நர்சிங்கி அருகே விட்டுச் சென்றனர். பின்னர், அவர்கள் மூன்று கார்களில் மொய்னாபாத் நோக்கி தப்பிச் சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர். காவல்துறையினரால் பிடிக்கப்பட்ட கடத்தல்காரர்கள் விசாரணையின் போது அகிலா பிரியா மற்றும் அவரது […]
பிரிட்டனில் பரவி வரும் உருமாறிய புதிய வகையான கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவதொடங்கிய நிலையில், அதில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலே இன்னும் குறையாத நிலையில், பிரிட்டனில் புதிய வகையான கொரோனா வைரஸ் வேகமாக பரவத்தொடங்கியது. இதனால் 50-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் பிரிட்டனுடனான விமான சேவைகளை நிறுத்தியுள்ளது. ஆயினும் ஸ்பெயின், ஜப்பான், ஆகிய நாடுகளில் இந்த புதிய வகையான கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் உருமாறிய கொரோனா, இந்தியாவிலும் பரவதொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. […]
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இதில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ள நிலையில், மூன்றாம் டெஸ்ட் போட்டி வரும் 7 ஆம் தேதி நாளை சிட்னியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ரஹானே தலைமையிலான 11 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்திய அணியின் […]
உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் ஊழியரை வீடு தேடி சென்று நலம் விசாரித்துள்ளார் தொழிலதிபர் ரத்தன் டாடா. 83 வயதான இவர் டாடா குழுமம் நிறுவனங்களின் தலைவராக பதவி வகித்த பிறகு தற்போது அறக்கட்டளை பணிகளை முன்னின்று கவனித்து வருகிறார். இவரது நிறுவனத்தில் பணியாற்றிய ஓய்வுபெற்ற முன்னாள் ஊழியர் ஒருவர் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலம் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் இவரை பார்ப்பதற்காக மும்பையில் இருந்து புனே சென்ற ரத்தன் டாடா, வீட்டில் […]
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை வரும் திங்கட்கிழமை (ஜனவரி 11 )நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கறிஞர் எம்எல் ஷர்மா உள்ளிட்டோரின் வழக்கு மீதான விசாரணையை தலைமை நீதிபதி அமர்வு ஒத்திவைத்தது. விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையில் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என தலைமை நீதிபதி கவலை தெரிவித்தனர். வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், குறைந்த பட்ச ஆதார விலையை சட்ட ரீதியாக உறுதிபடுத்த […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் 8ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தரிசனம் செய்வதற்கான முன்பதிவு இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகியது என்று தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம் 1-ஆம் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். இதையடுத்து ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடங்கி, இருமுடி கட்டி அய்யப்பனை […]
மூன்று ஆண்டுகளுக்கு முன்பதாக இஸ்ரோ தலைமையகத்தில் வைத்து தான் விஷம் உட்கொண்டதாக இஸ்ரோவின் உயர்மட்ட விஞ்ஞானி தபான் மிஸ்ரா குற்றம் சாட்டியுள்ளார். இஸ்ரோவில் தற்பொழுது மூத்த ஆலோசகராக பணியாற்றி வரக்கூடிய திரு. தபான் மிஸ்ரா அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் பதவி உயர்வு நேர்காணலின் போது தான் ஆபத்தான ஆர்சனிக் ட்ரொக்ஸைடு விஷத்தை தோசை மற்றும் சட்டினியுடன் உட்கொண்டதாக கூறியுள்ளார். அப்பொழுது அவர் அகமதாபாத்தை […]
உத்திரபிரதேச மாநிலத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவில் புதியதாக 100 பெண்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். உத்திரபிரதேசம் மாநிலத்தில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் தேசிய பேரிடர் மேலாண்மையில் மீட்பு பணிக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள தேசிய பேரிடர் மேலாண்மை இயக்குனர் எஸ் என் பிரதான் அவர்கள் பெண்கள் முழுமையான மீட்பு பணியாளராக பயிற்றுவிக்கபடுவார்கள் என தெரிவித்துள்ளார். சமீபத்தில் உத்தரப்பிரதேச அரசு தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினரை அழைத்தபோது பெண்கள்தான் அங்கு சென்று மீட்பு […]
உத்தரப் பிரதேச மாநிலம், மிர்சாபூரை சேர்ந்தவர் பன்வாசி லால். இவர் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 11 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தனது குடும்பத்துடன் சேர்ந்துள்ளார். பன்வாசி லால் மனநிலை சரியில்லாதவர் ஆவார். இவர் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இவர் 2020 நவம்பர் 17 அன்று அட்டாரி எல்லை வழியாக ஒப்படைக்கப்பட்ட நிலையில், மனநிலை காரணமாக அவர் வீட்டிற்கு செல்லும் வழி தெரியாது. அவரை மீண்டும் அழைத்து வர அவரது குடும்பத்தினர் அமிர்தசரஸ் சென்றனர். ஜனவரி […]
உள்நாட்டு நீர் வழிப் போக்குவரத்தை மேம்படுத்த, 105 மில்லியன் அமெரிக்க டாலர் திட்டத்தில் மத்திய அரசும், மேற்கு வங்க அரசும், உலக வங்கியும் கையெழுத்திட்டுள்ளன. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கு வங்க உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து, தளவாடங்கள் மற்றும் இட மேம்பாட்டு திட்டம் ஆகியவை ஹூக்ளி ஆற்றில் பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்தவும், கொல்கத்தா செல்வதற்கான வசதியை மேம்படுத்த இடவசதியைத் திட்டமிடவும், கொல்கத்தா மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், மாநில […]
ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் வளாகத்தில், இந்துத்துவா குழுவின் நான்கு உறுப்பினர்கள் காவி கொடியசைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து தாஜ்கஞ்ச் காவல் நிலைய ஆய்வாளர் சந்திர திரிபாதி கூறுகையில், வலதுசாரி தலைவர் குவாரா தாகூர் தலைமையில் தாஜ்மஹால் வளாகத்தில் 3 பேர் காவி கொடிகளை அசைத்தனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் இந்து ஜாக்ரன் மன்ச் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள். தாகூர் அவர்கள் இளைஞர் பிரிவின் மாவட்ட தலைவராக உள்ளார் என தெரிவித்துள்ளார். […]
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் பட்டன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஐந்து வயது குழந்தை உட்பட மூன்று பேர் கொண்ட குடும்பத்தினர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மூவரும் தங்கள் வீட்டிற்குள் மயக்க நிலையில் காணப்பட்ட பின்னர், அவர்களை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், இருப்பினும், அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து உள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையின்படி, அறை ஹீட்டரிலிருந்து வெளிப்படும் கார்பன் மோனாக்சைடு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு […]
தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சரித் உள்ளிட்ட 20 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கேரள மாநிலத்தில் தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சரித் உள்ளிட்ட 20 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் சரித் பெயர் முதலாவது இடத்திலும், ஸ்வப்னா சுரேஷ் பெயர் இரண்டாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளது. தங்கக்கடத்தல் விவகாரத்தில், பல்வேறு அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கும் […]
கொரோனாவுக்கு மத்தியிலும் கடந்த ஆண்டை விட 2522.5 கோடி வருவாய் அதிகரித்துள்ளதாக உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸால் பல உயிரிழப்புகள் மற்றும் பிரச்சனைகள் எழுந்த போதிலும், உத்திர பிரதேச மாநிலத்தில் பொருளாதார இழப்பீடுகளை எதிர்கொள்ளும் வகையில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் 2522.5 கோடி அதிகமாக வருவாய் கிடைத்துள்ளதாக நிதியமைச்சர் சுரேஷ் கன்னா அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 2019 டிசம்பரில் 10,008.2 கோடி வருவாய் வந்ததாகவும், இந்த ஆண்டு 2020 […]
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முயற்சியை பாராட்டி, முதல்வர் பழனிசாமி உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள் நன்றி தெரிவித்துள்ளதோடு மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் அவர்களும் நன்றி தெரிவித்துள்ளார். டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவின் பெயரில் தமிழ் மொழி கலாச்சாரத்தை பரப்பும் வகையில் தமிழ் அகடமி அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக டெல்லி தமிழ் சங்கத்தின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான என்.ராஜா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் அகாடமிக்கான தனி அலுவலகம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் […]
வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு மீது மேலும் அழுத்தம் கொடுக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதற்கு எதிராக மாநில சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முடிவு செய்துள்ளார். மத்திய அரசின் சார்பில் வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.இந்த மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.இதைத்தொடர்ந்து இவைகள் சட்டமாக மாறின.ஆனால் […]
மேற்கு வங்க மாநிலத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் லட்சமி ரத்தன் சுக்லா அவர்கள் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் தனது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் பாஜக, காங்கிரஸ் மற்றும் பிற இடதுசாரி கட்சிகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை பலமிழக்கச் செய்யும் வகையில் வலைவீசி தங்களுக்கான வாக்குகளை சேகரித்து வருகிறது. ஏற்கனவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பல அமைச்சர்கள் […]