பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. புதுச்சேரியில் புதிய நியமன எம்எல்ஏக்களாக பாஜகவைச் சேர்ந்த மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். செல்வம் (பாஜக மூத்த நிர்வாகி, இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்) தீபாய்ந்தான் (முன்னாள் எம்எல்ஏ) ராஜசேகர் (காரைக்காலைச் சேர்ந்த தொழிலதிபர், பாஜக) இந்த நியமனத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக, நியமன எம்எல்ஏக்களாக இருந்த […]
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு (ஆகஸ்ட் 14, 2025 வரை) பராமரிப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. குறிப்பிட்ட நாள்களில் யானை பாதை, படிப்பாதை உள்ளிட்டவற்றை பக்தர்கள் பயன்படுத்திகொள்ள கோயில் நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது. பக்தர்கள் மலைக்கோயிலை அடைய படிக்கட்டுகள், மின் இழுவை ரயில் (விஞ்ச்) அல்லது யானை பாதை ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். மேலும், மொபைல் போன்கள் […]
சென்னை : உலக மக்கள்தொகை தினத்தில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல் என தொகுதி மறுவரையறை குறித்து இன்று உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கண்ணியத்துடன் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தமிழ்நாட்டை பழிவாங்குகிறது மத்திய அரசு. அனைவருக்கும் சுகாதாரம் மற்றும் கல்வி என நிலையான வளர்ச்சியில் சாம்பியன்கள் ஆனாலும், நமக்கு […]
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வு தொடர்பாக வினாத்தாள் கசிவு குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியது. இதையடுத்து, டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் விளக்கமளித்துள்ளார். இந்த விவகாரம் தேர்வர்கள் மத்தியில் குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்திய நிலையில், அவர் இந்தப் பிரச்சினை குறித்து தெளிவான முறையில் பதிலளித்துள்ளார். 3,935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 போட்டித்தேர்வு, நாளை (ஜூலை 12) நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் இத்தேர்வை 22 லட்சத்துக்கும் […]
விருதுநகர் : பாமக நிறுவனர் ராமதாஸ், தனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். விருதாச்சலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், ““என் வீட்டில், நான் உட்காரும் இடம் அருகேயே ஒட்டுக் கேட்கும் கருவியை வைத்துள்ளனர். அதை யார், எதற்காக வைத்தார்கள் என்பதை ஆராய்ந்து வருகிறோம். அது லண்டனில் இருந்து வாங்கி வரப்பட்டுள்ளது. சாதாரணமானது அல்ல.. மிகவும் விலை உயர்ந்த கருவி, நேற்று முன்தினம் ஒட்டு கேட்கும் கருவி இருந்ததைக் கண்டறிந்து […]
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், வருகின்ற 15-ம் தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது போக, 16-07-2025 மற்றும் 17-07-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை […]
திருப்பூர் : மாவட்டம் அவிநாசியில் புதுமணப் பெண் ரிதன்யா (27) தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கைது செய்யப்பட்ட அவரது மாமியார் சித்ராதேவியின் ஜாமின் மனுவை திருப்பூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் 2025 ஜூலை 11 அன்று தள்ளுபடி செய்தது. ரிதன்யாவின் பெற்றோர், ஜாமின் வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர், இது நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டது. இதற்கு முன்னர், ரிதன்யாவின் கணவர் கவின்குமார் மற்றும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரின் ஜாமின் மனுக்களும் ஜூலை 7 […]
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி, 2025 ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வர உள்ளார். இந்தப் பயணத்தின் போது, அவர் அரியலூர், பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு செல்லவுள்ளார். இந்த வருகை, அரசியல் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை நிகழ்வில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. […]
சென்னை : தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (TNDALU), 2025-2026 கல்வியாண்டிற்கான 3 ஆண்டு எல்.எல்.பி. (LL.B) சட்டப்படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை ஜூலை 25, மாலை 5:45 மணி வரை நீட்டித்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, மாணவர்களுக்கு கூடுதல் நேரம் வழங்குவதற்காகவும், சட்டப்படிப்பில் சேர விரும்புவோருக்கு விண்ணப்ப செயல்முறையை எளிதாக்குவதற்காகவும் வெளியிடப்பட்டது. விண்ணப்பங்கள் www.tndalu.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக மட்டுமே ஏற்கப்படும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.இந்த 3 ஆண்டு எல்.எல்.பி. படிப்பு, […]
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (11-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், 12-07-2025 முதல் 14-07-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதைப்போல, 15-07-2025 மற்றும் 16-07-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் […]
மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான், கால்நடை வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் கால்நடைகளின் முன்னிலையில், “ஆடு மாடு மேய்ப்பது அவமானம் அல்ல, வெகுமானம்,” என்று எழுச்சியுடன் கூறினார். மாநாட்டில் பேசிய சீமான், “திருமால், பெருமாள், கண்ணன் ஆடு மாடு மேய்தனர். இயேசு, நபிகள் நாயகம் ஆடு மாடு மேய்தனர். கால்நடைகள் நம் உணர்வுடன் கலந்தவை. மாட்டுக்கு பொங்கல் […]
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் ” எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். ஆனால், ‘தமிழ்நாடு’ என்று சொல்லக் கூடாது என்று சொல்லும் கூட்டத்துடன் இப்போது அதிமுகவையும் சேர்த்துவிட்டார். அதிமுகவை மீட்க முடியாத இவர், தமிழகத்தை மீட்கப் போகிறாராம் எனவும் “பாஜகவின் டப்பிங் வாய்சில் பேசிக்கொண்டிருந்த பழனிசாமி, தற்போது ஒரிஜினல் வாய்சில் பேசுகிறார்” எனவும் விமர்சனம் செய்து பேசியிருந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வைத்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், […]
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மகனும் கட்சியின் செயல் தலைவருமான அன்புமணிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அன்புமணியின் சமீபத்திய கருத்துகளுக்கு பதிலளித்த ராமதாஸ், தனது பெயரைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்து, மறைமுக எச்சரிக்கை விடுத்தார். இந்தப் பேச்சு, பாமகவில் தந்தை-மகன் இடையேயான மோதலை மேலும் […]
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற தலைப்பில் தொடங்கப்பட்ட சுற்றுப்பயணத்திற்கு கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஜூலை 10 அன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், இந்தப் பயணத்தை “தமிழ்நாடு என்று சொல்லக் கூடாது என்று கூறும் கூட்டத்துடன் இப்போது அதிமுகவையும் சேர்த்துவிட்டார்” என்று கிண்டலாக விமர்சித்தார். இது குறித்து மு.க. ஸ்டாலின் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ […]
சென்னை : படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? என்று அரசுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கெனவே மீனவப் பெருமக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக உயிரைத் துச்சமென நினைத்துக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர். தமிழ்நாடு அரசு இனி வரும் காலங்களில் இதுபோன்ற செயல்களை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என்று கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”மீனவ நண்பர்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் […]
சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக, மதுரை மாநகராட்சியில் 100-க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு விதிகளை மீறி வரி குறைக்கப்பட்டு முறைகேடு செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில், ”சில நாட்களுக்கு முன்பு மதுரை மாநகராட்சியில், சொத்து வரி விதிப்பதில் மிகப் பெரிய ஊழல் முறைகேடு […]
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில் நேற்றும் (ஜூலை 9) இன்றும் (ஜூலை 10) இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்றைய தினம் முதலமைச்சர் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு பயணித்து, அங்கிருந்து கார் மூலம் திருவாரூர் வந்தடைந்தார். திருவாரூர் பவித்திரமாணிக்கத்தில் தொடங்கி, தூர்காலயா ரோடு, தெப்பக்குளம் தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக 5 கி.மீ. […]
சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர் ராஜா (வயது 48), 26 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இவர், கோவை நகர காவல்துறையால் சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டுள்ளார். 1998 பிப்ரவரி 14 அன்று நடந்த இந்தத் தொடர் குண்டுவெடிப்பில் 58 பேர் உயிரிழந்தனர் மற்றும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ராஜா, தையல் தொழிலாளியாகவும், எம்பிராய்டரி வேலை செய்பவராகவும் இருந்தவர், குண்டுவெடிப்புக்கு முன் வெடிகுண்டுகளை தயாரித்து […]
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக, இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “ஆட்சியை குறை சொல்ல வேண்டும் என்ற காரணத்திற்காக எதிர்க்கட்சித் தலைவர் அறநிலையத்துறையை விமர்சித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை கல்லூரிகளில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள்தான் பயில்கின்றனர். திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4 […]
சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ”கோவில் நிதியில் இருந்து கல்லூரி கட்டுகிறார்களாம். கோவிலின் முன்னேற்றத்திற்காக பொதுமக்களாகிய நீங்கள் நிதி கொடுத்தால், அதை வைத்து, இவர்கள் சம்பாதிப்பதற்காக கல்லூரிகள் அமைக்கிறார்களாம். ஏன் அரசாங்க நிதியை வைத்து கட்ட முடியாதா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் வகையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, “இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்படி கோயில்கள் நிதியில் கல்வி […]